Connect with us
MGR and Bharathiraja

Cinema History

இனிமேல் சினிமால நடிக்கக்கூடாது… பாரதிராஜா படத்தை பார்த்து எம்.ஜி.ஆர் எடுத்த வினோத முடிவு… ஏன் தெரியுமா?..

எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”. இத்திரைப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதால் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

MGR

MGR

எனினும் அவர் முதல்வர் ஆன பிறகு கவிஞர் வாலியின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக முடிவு செய்தார். அப்போதைய இந்திய பிரதமரிடம் இருந்து எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதற்கான அனுமதியும் கிடைத்தது. அத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. அத்திரைப்படத்திற்காக சில பாடல்களும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அத்திரைப்படம் அப்படியே டிராப் ஆனது.

Dr.Kantharaj

Dr.Kantharaj

இந்த நிலையில் பிரபல மருத்துவரும் சிவாஜி கணேசனுடன் மிக நெருங்கி பழகியவருமான டாக்டர். காந்தராஜ், தனது பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியதற்கான காரணம் குறித்து ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“பாரதிராஜா தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான் தமிழ் சினிமா உலகமே மாறியது. 16 வயதினிலே வந்த பிறகு சினிமாவில் சின்ன சின்ன கதைகளை கொண்டு படங்கள் எடுக்க முடியும் என்ற தைரியமே வந்தது. இந்த தங்கை பாசம், அம்மா பாசம் ஆகியவைகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் எல்லாம் ஓரமாகப்போனது” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இந்த சீரியல் நடிகரும் ரகுவரனும் இவ்வளவு குளோஸ் பிரண்ட்ஸா?? இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கு…

Bharathiraja

Bharathiraja

மேலும் பேசிய அவர் “பாரதிராஜா வந்த பிறகுதான் தமிழ் சினிமாவுக்கென்றே ஒரு மரியாதை வந்தது. கிழக்கே போகும் ரயில் போன்ற திரைப்படத்தை எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த படங்களை பார்த்துத்தான் எம்.ஜி.ஆர் பயந்தார். இந்த படங்கள் எல்லாம் வெற்றியடைவதை பார்த்த எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் பாணி மாறிப்போய்விட்டது என்பதை புரிந்துகொண்டு அன்றிலிருந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என முடிவெடுத்தார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top