Cinema News
நான் அப்படி நடிக்க மாட்டேன்.. நீங்க வேணா டூப் போட்டு எடுத்துக்குங்க!. எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த காட்சி!…
சிவாஜிக்கு ராசியாக இருந்த பத்மினி எம்.ஜி.ஆருடன் முதன் முதலாக நடித்த திரைப்படம்தான் மதுரை வீரன். டி.யோகனந்த் இயக்கிய முதல் எம்.ஜி.ஆர் படமும் இதுதான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் மிகவும் இயல்பாக நடித்திருந்தார். நாட்டுப்புற பாடலில் மக்களால் வணங்கப்பட்ட ஒருவர்தான் மதுரை வீரன்.
அந்த காலத்தில் வாய் வழியாகவும், கூத்துகள் மூலமாகவும் அதிகம் பேசப்பட்ட கதைதான் மதுரை வீரன். அதிகாரத்திமிர் கொண்ட மன்னர்களால் ஒருவர் மாறு கால், மாறு காய் வாங்கப்பட, அதாவது, ஒரு கால் மற்றும் கை வெட்டப்பட்டதால் மரணமடைந்த ஒரு கடவுள்தான் மதுரை வீரன் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
இதையும் படிங்க: இந்த படத்தில் நான் நடிக்கட்டுமா?.. எம்.ஜி.ஆர். கேட்டு வாங்கி நடித்த அந்த திரைப்படம்!…
அதைத்தான் மதுரை வீரன் என்கிற பெயரில் சினிமாவாக எடுத்தனர். எம்.ஜி.ஆர் திமுகவில் வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. எனவே, பகுத்தறிவு மற்றும் மூடநம்பிக்கை தொடர்பான காட்சிகளில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அப்போதுதான் மதுரை வீரன் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தார்.
படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு கால், ஒரு கை வெட்டப்பட்டு அவர் மரணமடைவது போல் காட்சி எடுக்கப்பட்டது. அதன்பின், அவர் ஆவியாக மாறி தனது மனைவிகளான பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோரோடு இணைந்து கடவுள் போல காட்சி கொடுக்க வேண்டும். இதுதான் காட்சி.
இதையும் படிங்க: பாலைவனத்தில் ஆயிரம் பேரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!.. அடிமைப்பெண் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..
ஆனால், இந்த காட்சியில் நடித்தால் திமுக தரப்பில் இருந்து தனக்கு எதிர்ப்பு வரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, நான் இந்த காட்சியில் நடிக்க முடியாது. மீறி நடித்தால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே, எனக்கு பதில் வேறு ஒருவரை வைத்து இந்த காட்சியை எடுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார்.
எம்.ஜி.ஆர் அதில் உறுதியாக இருந்ததால் இயக்குனரும் வேறு வழியில்லாமல் ஒரு டூப் நடிகரை போட்டு அந்த காட்சியை இயக்குனர் எடுத்திருக்கிறார். சுமார் 2 வருடங்கள் உருவான மதுரை வீரன் திரைப்படம் புத்தாண்டுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.