நடிப்புதான் ஆனாலும் என்னால முடியாது!.. நடிகரின் முன் அப்படி நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்..
நடிகர் எம்.ஜி.ஆர் நடிப்புதான் என்றாலும் சில விஷயங்களை செய்யவே மாட்டார். மது அருந்துவது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும் நடிக்க மாட்டார். அதேபோல், ஒரு தவறான அறிவுரையை ரசிகர்களுக்கு சொல்ல மாட்டார். அதேபோல், தவறு செய்வது போல எந்த காட்சியிலும் நடிக்கமாட்டார். ஏனெனில், தன்னுடைய படங்களை பார்க்கும் இளைஞர்களுக்கு ஒரு தவறான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இதை அவர் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
இது ஒருபுறம் எனில், ஒரு நடிகரின் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக அவர் முன் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த சம்பவம் திரையுலகில் நடந்துள்ளது.
தியாகராஜ பாகவதர் ஹீரோவாக நடித்து 1941ம் வருடம் வெளியான திரைப்படம் அசோக் குமார். இந்த படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். மேலும், கண்ணாம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை ராஜா சந்திரசேகர் என்பவர் இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு முன் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் தியாகராஜ பாகவதர். அவருக்கே ரசிகராக எம்.ஜி.ஆர் இருந்தார். அவர் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பகவாதர் போல கிராப் வைத்துக்க்கொண்டிருந்த காலம் அது.
காட்சி படி நிரபராதியான தியாகராஜ பகவாதர் கண்களில் தளபதியான எம்.ஜி.ஆர் பழுக்க காட்சிய கம்பியால் குத்த வேண்டும். அதில், தியாகராஜ பகவாதருக்கு கண் பார்வை போய்விடும். இதுதான் காட்சி. இந்த காட்சியை எடுக்கும்போது கம்பியை எடுத்துக்கொண்டு தியாகராஜ பகவாதரின் அருகில் சென்ற எம்.ஜி.ஆர் அப்படியே நின்றுவிட்டார்.
‘என்ன ஆச்சு?’ என இயக்குனர் கேட்க எம்.ஜி.ஆரோ ‘நடிப்புதான் என்றாலும் நான் அன்பும், மரியாதையும் வைத்திருக்கும் பகாவதரின் கண்களை குருடுவாக்குவது போல் என்னால் நடிக்க முடியாது’ என சொல்லிவிட்டார். எனவே, காட்சியை மாற்றி பாகவதரே எம்.ஜி.ஆரின் கையில் இருந்த கம்பியை பிடிங்கி தனது கண்களை குத்திக்கொள்வது போல் காட்சியை இயக்குனர் எடுத்தார்.