தமிழில் சினிமாக்கள் வெளிவர துவங்கிய காலத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் எம்.கே.தியாகராஜா பகவாதர். கணீர் குரல், வசீகரிக்கும் முகம், மயக்கும் கண்கள் என ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாகும். இவர் நடிப்பில் வெளிவந்த ‘ஹரிதாஸ்’ என்கிற திரைப்படம் ஒரு திரையரங்கில் மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்தது.
இவர் எம்.ஜி.ஆருக்கெல்லாம் முன்னோடி. இவர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த போது எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். தியாகராஜரின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்த நடிகர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். ஒருமுறை தியாகராஜ பகவாதர் ‘அசோக்குமார்’ எனும் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் தளபதி வேடத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆர். அந்த வேடத்தை எம்.ஜி.ஆருக்கு வாங்கி கொடுத்தவர் தியாகராஜ பகவாதர்.
இப்படத்தின் ஒரு காட்சியில் மன்னனின் உத்தரவுபடி தியாகராஜ பகவாதரின் கண்களை தளபதியான எம்.ஜி.ஆர் கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். கையில் கம்பியை எடுத்த எம்.ஜி.ஆர் தியாகராஜின் அருகே சென்று அவரின் கண்ணை குத்துவது போல் நடிக்க முடியாமல் கண்கள் கலங்கியபடி திணறி நின்றார். இயக்குனரும், தியாகராஜ பகவாதர் எவ்வளவு சொல்லியும் எம்.ஜி.ஆர் ‘உங்கள் கண்ணை குத்துவது போல என்னால் நடிக்க முடியாது’ எனக்கூறி விட்டார்.
அதன்பின், நிரபராதியான தனக்கு மன்னன் தண்டனை கொடுத்ததால் ஆத்திரத்தில் தியாகராஜரே எம்.ஜி.ஆரின் கையில் இருந்த கம்பியை எடுத்து தனது கண்களை குருடாக்குவது போல காட்சிகளை எடுத்தார்களாம்.
தியாகராஜ பகவாதர் மேல் எம்ஜிஆர் எவ்வளவு பாசமும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதற்கு இதுவே சாட்சி!. அசோக்குமார் திரைப்படம் 1941ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு தெரியாமல் ஸ்ரீதர் செய்த வேலை.. கண்டுபிடித்த மக்கள் திலகத்தின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?…
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…