சம்பளமே வாங்காமல் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்.. யாருக்காக தெரியுமா?...
வாலிப வயது முதலே நடிப்பின் மீது எம்.ஜி.ஆருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் சினிமா எடுப்பவர்களின் ஓரிரண்டு பேரே இருந்தனர். எனவே, நாடகங்களுக்கு என பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. எனவே, நாடக கம்பெனிகளில் வேலை செய்து வந்தார் எம்.ஜி.ஆர். பல நாடக கம்பெனிகளில் மாத சம்பளத்திற்கு எம்.ஜி.ஆர் வேலை செய்துள்ளார்.
அவருடன் நடித்த பல நாடக நடிகர்கள் பின்னாளில் சினிமாவில் நடித்தனர். இன்னும் சொல்லப்போனால் அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நடித்த பெரும்பாலான சினிமா நடிகர்கள் நாடகங்களில் இருந்து வந்தவர்கள்தான். எம்.ஜி.ஆரும் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்து பெரிய ஹீரோவாக மாறினார்.
நாடகங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் நடத்தும் நாடகங்களிலும் மாத சம்பளத்திற்கு எம்.ஜி.ஆர் வேலை செய்துள்ளார். கலைவாணர் மீது எம்.ஜி.ஆருக்கு எப்போதும் நல்ல மரியாதை உண்டு. ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாக ‘பைத்தியக்காரன்’ என்கிற திரைப்படத்தை தயாரித்தார்.
அவருக்காக எம்.ஜி.ஆர் சம்பளமே வாங்காமல் அப்படத்தில் நடித்து கொடுத்தார். இந்த படம் 1947ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர் மட்டுமல்ல. அப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தனர். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக டி.என்.மதுரம் நடித்திருந்தார். இவரைத்தான் என்.எஸ்.கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவியாகவே பல திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திரமுகி படமே வேஸ்ட்தான்??… தயாரிப்பாளரிடம் கேள்வி கேட்டு வம்பிழுத்த ரசிகர்…