எம்ஜிஆரை வைத்து ஏவிஎம் எடுத்த ஒரே படம் - தொடர்ந்து படம் பண்ணாததற்கு காரணம்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் எக்கச்சக்க படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன. 30கள் காலத்தில் இருந்து இன்று வரை ஏவிஎம் நிறுவனத்தால் பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமாக காலம் காலமாக தன் வெற்றியை பதிவு செய்து கொண்டே வருகின்றன ஏவிஎம் நிறுவனம்.
சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி என பல்வேறு நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டும்தான் தயாரித்திருக்கின்றனர். அந்தப் படம் அன்பே வா.
இருந்தாலும் எம்ஜிஆருக்கு மெய்யப்ப செட்டியார் என்றால் மிகவும் பிடிக்குமாம். மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் போது எம்ஜிஆரின் குறுக்கீடு என்பது கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பணிபுரியும் போது பாடல் காட்சிகள் ஆகட்டும் திரைப்படக் காட்சிகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் மெய்யப்ப செட்டியார் பார்த்தாலே போதும். அதுவே ஓகே பண்ணிடுங்க என்றுதான் சொன்னாராம்.
அந்த அளவுக்கு மெய்யப்ப செட்டியார் மீது அதிக அளவு மரியாதையும் அக்கறையும் கொண்டு இருந்தாராம் எம்ஜிஆர். அன்பே வா திரைப்படம் எந்த அளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடைந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
அப்படி இருக்கையில் ஏன் தொடர்ந்து எம்ஜிஆர் வைத்து படங்கள் பண்ணவில்லை என்று சித்ரா லட்சுமணன் ஏவிஎம் குமரன் இடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த குமரன் அடுத்ததாக ஒரு படத்தை எம்ஜிஆரை வைத்து தயாரிக்க எண்ணினோம். ஆனால் எம்ஜிஆர் வேறொரு படத்தில் பிசியாக இருந்ததனால் அந்தப் படத்தை அப்படியே கைவிட்டு விட்டோம் என்று கூறினார்.
ஆனால் ஏவிஎம் நிறுவனத்திற்கோ எம்ஜிஆருக்கோ எந்த வித கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இல்லவே இல்லை .சூழ்நிலை காரணமாகத்தான் எம்ஜிஆரை வைத்து அடுத்ததாக எங்களால் படம் பண்ண முடியவில்லை என்று குமரன் கூறினார்.
இதையும் படிங்க : அந்த ஹீரோவ என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க! கொட்டித்தீர்த்த வடிவேலு