Categories: Cinema History Cinema News latest news

இதெல்லாம் பேச முடியாது! பயந்தோடிய எம்ஜிஆர் – தூக்கி நிறுத்திய சிவாஜி! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

தமிழ் சினிமாவை 50களில் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் நடிகர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள். மேலும் நாடக மேடைகளில் பல நாடகங்களை அரங்கேற்றியவர்கள். சதிலீலாவதி படத்தின் மூலம் எம்ஜிஆர் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி முதன் முதலில் அறிமுகமானார்.

இருவருக்கும் தனிதனியான ஸ்டைல்கள் இருந்தன. சிவாஜியின் படங்கள் பெரும்பாலும் குடும்ப பாசங்களை மையப்படுத்தியே வெளிவந்தன. ஆனால் எம்ஜிஆரின் படங்களில் வீர வசனம், கத்தி வாள், என ஒரே ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகளை மையப்படுத்தியே படங்கள் வெளிவந்தன.

sivaji1

இப்படி மாறி மாறி இருவரும் அவர்களின் கடமையில் மிகவும் கவனமாக இருந்தனர். மேலும் இவர்களுக்குள்ள ரசிகர்களின் பலமும் அனைவரையும் ஆச்சரியத்தில் திகைத்த வைத்தன. இந்த நிலையில் அண்ணா எழுதிய நாடகமான ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தது எம்ஜிஆர்தானாம். ஆனால் அந்த நாடகத்தின் வசனத்தை பார்த்து எம்ஜிஆர் இது என்னால் பேசமுடியாது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

அதன் பின் சிவாஜியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 70 பக்கங்கள் கொண்ட அந்த வசனத்தை சிவாஜியிடம் 11 மணிக்கு கொடுத்திருக்கிறார்கள். 2 மணிக்கு வந்து எல்லாவற்றையும் படித்து விட்டாயா ? என்று கேட்க இவரும் ஆம் என்று சொல்லி ஒரு ரிகர்சலும் பார்த்திருக்கிறார்கள். எந்த பிழையும் இல்லாமல் கடகடவென சொல்லிவிட்டாராம்.

sivaji2

அன்று இரவு 9 மணியளவிலேயே பெரியார் முன்னிலையில் நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த நாடகத்தை கண் இமைக்காமல் பார்த்த பெரியார் அந்த சிவாஜி வேடத்தில் நடித்தது யார்? கூப்பிடு என்று சொல்லியிருக்கிறார். இவரும் வர இனிமேல் உன் பெயரும் சிவாஜி தான் என்று சிவாஜியை பார்த்து பெரியார் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து கணேசன் என்ற பெயர் சிவாஜி கணேசன் என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : எம்ஜிஆர் பட பாடலை தொடர்ந்து 50 முறை கேட்ட சிவாஜி!.. என்ன முடிவெடுத்தார் தெரியுமா?..

Published by
Rohini