Connect with us
mgr

Flashback

எம்ஜிஆர்கிட்ட பொய் சொன்னா அவ்வளவுதான்.. அப்படி ஒரு சம்பவம்.. ஸ்டண்ட் மாஸ்டர் பகிர்ந்த தகவல்

எம்ஜிஆர் செய்த உதவி பற்றி ஒரு ஸ்டண்ட் கலைஞர் பகிர்ந்த தகவல் கேட்போரை இப்படியும் ஒரு மனிதரா எம்ஜிஆர் என்று வியக்கும் அளவுக்கு இருந்தது. அரை கிரவுண்ட் நிலத்தை 5000 அட்வான்ஸ் கொடுத்து அந்த ஸ்டண்ட் கலைஞர் வாங்கினாராம். மீதி பணத்தை மூன்று மாதங்களில் செலுத்திவிடுகிறேன் என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக கட்ட ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இன்னும் 25 நாள்களே உள்ள நிலையில் நிலத்தின் சொந்தக்காரர் 25 நாள்களில் செலுத்தவில்லை எனில் நிலமும் கிடையாது. அந்த 5000 ரூபாயும் கிடையாது என்று சொல்லிவிட்டாராம்.

எம்ஜிஆருக்கு ஒரு முன்று படங்களுக்கு இந்த ஸ்டண்ட் கலைஞர்தான் டூப் போட்டாராம். மேலும் சில படங்களிலும் டூப் போட்டுக் கொண்டிருந்தாராம். அந்த படங்களுக்கெல்லாம் இவருக்கு சம்பளம் வராமல் இருந்ததாம். அதனால் சம்பளத்தை கேட்டுப் பார்ப்போம் என பல படப்பிடிப்பிற்கு ஏறி இறங்கியிருக்கிறார். ஆனால் அப்புறம் வரும் என சொல்லி இவரை அனுப்பி விட்டார்களாம்.

எம்ஜிஆர் சூட்டிங் நடந்து கொண்டிருந்த ஒரு ஸ்டூடியோவில் இவர் நிற்க எம்ஜிஆரின் பி.ஏ சபாபதி இந்த ஸ்டண்ட் கலைஞரை பார்த்து என்ன விஷயம் என கேட்டிருக்கிறார். நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல ‘தலைவரிடம் கேளேன்’ என கூறினாராம்.மேலும் தலைவர் இப்போது சாப்பிட போயிருக்கிறார். வரும் வெற்றிலை போட்டு வந்தால் நல்ல மூடில் இருக்கிறார் என்று அர்த்தம். வெற்றிலை பாக்கு போடாமல் வந்தால் அவர் மூடு சரியில்லை என்று அர்த்தம். அதனால் அவர் எப்படி வருகிறார் என்பதை பார்த்த பிறகு கேளு என்று சபாபதி கூறியிருக்கிறார்.

சொன்னப்படியே வெற்றிலை பாக்கு போட்டுத்தான் எம்ஜிஆர் வந்தாராம். அருகில் நின்று சபாபதி இந்த ஸ்டண்ட் கலைஞரை அறிமுகம் செய்து ‘உங்களை பார்க்க வந்திருக்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார். என்ன விஷயம் என எம்ஜிஆர் கேட்டாராம். அந்த ஸ்டண்ட் கலைஞர் நடந்ததை எல்லாம் சொல்ல சரி கொஞ்சம் காத்திரு என நடிக்க போய்விட்டாராம். நடித்து முடித்த பிறகு சபாபதியை அழைத்து அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர்.

அதில் 100 ரூபாய் கட்டுகள் இருந்திருக்கிறது. அதை பாதியாக எடுத்து கிள்ளி கொடுத்தாராம் எம்ஜிஆர். உடனே போய் ரிஜிஸ்ட்ரேஷனும் செய்து கொள் என்று சொல்லிவிட்டாராம். அந்த ஸ்டண்ட் கலைஞரும் அதை வாங்கிக் கொண்டு போக பாதியிலேயே எவ்வளவுதான் கொடுத்தார் என எண்ணிப் பார்த்திருக்கிறார். அதில் 5800 ரூபாய் இருந்திருக்கிறது. ரிஜிஸ்ட்ரேஷனும் முடித்துவிட இவருக்கு வர வேண்டிய பணம் எல்லாமே வந்தும் விட்டதாம்.

சரி கடனாகத்தான் வாங்கியிருக்கிறோம். பொய் சொன்னாலும் எம்ஜிஆருக்கு பிடிக்காது என நினைத்துக் கொண்டு பத்திரம் மற்றும் அவர் கொடுத்த 5800 ரூபாயையும் எடுத்துக் கொண்டு எம்ஜிஆரிடம் கொடுத்தாராம். இதை பார்த்ததும் எம்ஜிஆருக்கு கோபம் வந்துவிட்டதாம். இந்த பணத்தை வைத்து உன் இரு மகள்களுக்கு செயின் செய்து போடு என்று சொல்லி பணத்தை வாங்கவில்லையாம். அவர் சொன்னதை போல செயினையும் எம்ஜிஆரிடம் போய் காட்டினாராம். ஏனெனில் அவர் ஒரு உதவி செய்கிறார் என்றால் அதில் பொய் சொல்கிறோம் என்று தெரிந்தால் துளைத்துப்போடுவார் எம்ஜிஆர் என அந்த ஸ்டண்ட் கலைஞர் கூறினார்.

google news
Continue Reading

More in Flashback

To Top