அந்த நடிகருடன் நெருக்கமாக நடித்த ஜெயலலிதா!.. காட்சிகளை வெட்ட சொன்ன எம்.ஜி.ஆர்!..

சரோஜாதேவிக்கு பின் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்தவர் ஜெயலலிதா. ஸ்ரீதரின் இயக்கத்தில் வெண்ணிற ஆடை என்கிற படத்தில் அறிமுகமான ஜெயலலிதாவுக்கு இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் அமைந்தது. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
ஆயிரத்தில் ஒருவன் ஹிட் அடிக்கவே ஜெயலலிதாவை தனது பல படங்களில் நடிக்க வைத்தார் ஜெயலலிதா. அதோடு, எப்படி நடிப்பது, படப்பிடிப்பில் எப்படி நடந்து கொள்வது எல்லாமே சொல்லிக்கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவின் காட்ஃபாதராகவே எம்.ஜி.ஆர் மாறினார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!
ஆனால், ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சொல்வதை அப்படியே கேட்டு நடிக்கும் நபர் இல்லை. தனக்கு தோன்றியதை செய்வார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஆனாலும், ஜெயலலிதா தன்னை மாற்றிகொள்ளவில்லை. அரசியல்கட்சி துவங்கிய பின்னர் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
ஆனாலும் அரசியல்ரீதியாகவே சில சமயங்களில் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காமலும் ஜெயலலிதா நடந்து கொண்டார். சில காரணங்களால் தனது படங்களில் ஜெயலலிதாவை எம்.ஜிஆர். நடிக்க வைக்கவில்லை. எனவே, சரோஜாதேவி, லதா, மஞ்சுளா போன்ற நடிகைகள் நடித்தனர். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: அவர் வந்தாத்தான் கல்யாணம்!.. தீவிர ரசிகன் செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் என்ன பண்ணார் பாருங்க!..
இது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரால் தடுக்க முடியவில்லை. எம்.ஜி.ஆரை கோபப்படுத்துவதற்காக ரவிச்சநதிரனுடன் மிகவும் கவர்ச்சியாகவும், நெருக்கமாகவும் சில காட்சிகளில் நடித்தார் ஜெயலலிதா. டி.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த குமரிப்பெண், நான் ஆகிய படங்களை உதாரணமாக சொல்ல முடியும். குமரிப்பெண் படத்தில் வரும் ‘வருஷத்தை பாரு.. அறுபத்தி ஆறு’ பாடலில் ரவிச்சந்திரனுடன் ஜெயலலிதா நெருக்கமாக நடித்திருப்பதாக கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் டி.ஆர்.ராமண்ணாவை அழைத்து படத்தை போட்டு காட்ட சொன்னார்.
அந்த பாடலில் ரவிச்சந்திரனோடு ஜெயலலிதா நெருக்கமாக நடித்த சில காட்சிகளை வெட்டச்சொன்னார். மேலும், படத்தின் டைட்டிலில் காதல் இளவரசன் ரவிச்சந்திரன் என போடப்பட்டிருந்ததை மாற்றச் சொன்னார். அப்படியே செய்தார் டி.ஆர். ராமண்ணா. இதனால் ராமண்ணா மீது கோபப்பட்டார் ஜெயலலிதா. அடுத்து ராமண்ணா இயக்கிய ‘நான்’ படத்தில்
ரவிச்சந்திரனுடன் நீச்சல் உடையில் நடித்து எம்.ஜி.ஆருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தினார். ஜெயலலிதா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.