எம்.ஜி.ஆருக்கு நடிகையால் ஏற்பட்ட அவமானம்!.. வளர்ந்த பின் என்ன செய்தார் தெரியுமா?...
திரையுலகில் வளர்ந்து வரும் போதே, அல்லது கீழ்மட்ட நிலையில் இருக்கும்போதோ பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சினிமாவில் வளர்ந்து பெரிய ஹீரோ ஆகிவிட்டால் மரியாதையாக நடத்துவார்கள். ஆனால், அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
சிறுவயதில் இருந்து நாடகத்தில் நடிக்க தொடங்கிய எம்.ஜி.ஆர் தனது திரையுலக பயணத்தை துணை நடிகராக துவங்கினார். பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஒருமுறை எம்ஜியாருக்கு ‘சாயா’ என்னும் படத்தில் கதாநாயகன் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படத்தில் நடிகைக்கும் குமுதினி மடியில் தலைசாய்த்து பேசுவது போல் காட்சி அமைப்பு எடுக்கப்பட்டது. அப்பொழுது படபடப்பில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதாநாயகி குமுதனியின் கணவர் ராம்நாத் திடுக்கென்று எழுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அவர் அங்கிருந்து இயக்குனரிடம் இக்காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு பெரிய நடிகர் என்றால் பரவாயில்லை. சாதாரண ஒரு துணை நடிகர் எப்படி என் மனைவியின் மடியில் எப்படி தலை வைப்பது போல் காட்சி எடுப்பீர்கள் என்று சாடியுள்ளார். இவரைப்போல சாதாரண நடிகர் என் மனைவியின் மடியில் தலை வைக்கக்கூடாது என்றுகூறிவிட்டு அவரது மனைவி குமுதினியை கோபமாக அழைத்துச் சென்றுவிட்டாராம்.
பொன்மனச் செம்மலுக்கு இது ஒரு மிகப்பெரிய அவமானமாக போனது, அப்போது அங்கிருந்த தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் ‘இதையெல்லாம் அவமானமாக நினைத்து வருத்தப்படாதே.. இவர்கள் எல்லாம் உன்னை தேடி வரும் காலம் வரும்’ என சமாதானம் கூறிவிட்டு படம்பிடித்த அனைத்து படச்சுருளையும் தீயிட்டு கொளுத்தினார்.
அதன்பின் எம்.ஜி.ஆர் வளர்ந்து பெரிய நடிகரான பின் அதே குமுதினி எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரை சந்தித்து எனது வீடு ஒன்று ஏலத்திற்கு வந்துவிட்டது. நீங்கள்தான் மீட்டு தர வேண்டும்’ என்று கேட்டார் எம்.ஜி.ஆரும் பழசை மனதில் வைத்துக்கொள்ளாமல் அவரின் வீட்டை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: “அந்த இயக்குனரின் பெயர் மிஸ்ஸிங்”… விருது வழங்கும் விழாவுக்கே வர மறுத்த எம்.ஜி.ஆர்… யாரா இருக்கும்??