Cinema History
கோபத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்!.. பயந்து போன நம்பியார்… ஓடி வந்த எம்.ஜி.ஆர்..
Actor mgr: நாடகத்தில் பல வருடங்கள் நடித்து விட்டு சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய போதே அவருடன் வில்லனாக நடிக்க துவங்கியவர் நடிகர் நம்பியார். எனவே, தொடக்கம் முதலே இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆர் ஹீரோ என்றால் வில்லன் நம்பியார்தான் என்கிற நிலையே உருவானது.
ரங்கா ராவ், அசோகன், பி.எஸ்.வீரப்பா, எம்.ஆர்.ராதா, மனோகர் என பல நடிகர்கள் எம்.ஜி.ஆரின் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் எம்.ஜி. ஆருக்கு டெரர் வில்லனாக டஃப் கொடுத்தவர் நம்பியார்தான். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை உட்பட பல திரைப்படங்களில் இவர் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…
இதனாலேயே எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு நம்பியாரை பிடிக்காது. ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு இருந்தவர்கள் ரசிகர்கள் அல்ல! பக்தர்கள். எம்.ஜி.ஆருக்கு ஒன்றெனில் பதறிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் திரையில் இறந்து போவது போல காட்சி வந்தால் அவர் உண்மையிலே இறந்துபோவதாக நினைத்து பதறுவார்கள்.
மதுரை வீரன் என்கிற படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர் இறப்பது போல் படம் முடியும். இதில் கோபப்பட்ட அவரின் ரசிகர்கள் ஒரு தியேட்டரையே தீயிட்டு கொழுத்த முயன்ற சம்பவமெல்லாம் நடந்தது. அதேபோல், பாசம் என்கிற படத்தில் எம்.ஜி.ஆர் இறப்பது போல படம் முடியும். அதனால், அப்படமே தோல்வி அடைந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் அதை விரும்பவில்லை.
இதையும் படிங்க: ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…
எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்து 1965ம் வருடம் வெளியான திரைப்படம் எங்க வீட்டு பிள்ளை. இந்த படத்தில் கோழையாக இருக்கும் எம்.ஜி.ஆரை அவரின் மாமா நம்பியார் அடிக்கடி சவுக்கால் அடிப்பது போல் காட்சி வரும். இந்த காட்சியை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் முழு படத்தை பார்க்க கூட பொறுமை இல்லாமல் உடனே தியேட்டரிலிருந்து வெளியாகி நம்பியாரின் வீட்டுக்கு போய்விட்டனர்.
அவர் வீட்டின் கேட் முன்பு நின்று ‘வெளியே வா’ என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைக்கண்டு பயந்துபோன நம்பியார் உடனே எம்.ஜி.ஆரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல எம்.ஜி.ஆர் பதறியபடி நம்பியார் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ரசிகர்களிடம் ’இது தவறு.. இப்படி செய்யக்கூடாது.. நம்பியார் என்னை அடித்ததைத்தானே நீங்கள் பார்த்தீர்க்கள். நான் நம்பியாரை சவுக்கால் அடிக்கும் காட்சியும் படத்தில் வருகிறது. அதையும் பாருங்கள்’ என சொல்லி சமாதானம் செய்து அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தாராம்.
இதையும் படிங்க: கண்ணதாசனுக்காக இசையமைப்பாளரை மாற்றிய எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா!…