Cinema History
எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…
தமிழ் திரையுலகில் மிகவும் தீவிரமான ரசிகர்களை கொண்டிருந்தவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். சினிமாவில் அவர் எப்படி இருந்தாரோ அப்படித்தான் நிஜவாழ்விலும் இருப்பார் என அவரின் ரசிகர்கள் நினைத்த காலம் அது. எம்.ஜி.ஆரும் திரையுலகில் தனது குணத்திற்கு ஏற்ற்படியே கதாபாத்திரங்களை உருவாக்கி நடித்து வந்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஒன்றென்றால் அவரின் ரசிகர்கள் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்கள். அதனால்தான் அவர் தனியாக அரசியல் கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்ட போது அவரை வெற்றி பெற வைத்து தமிழகத்தின் முதலமைச்சராகவும் அமர வைத்து அழகு பார்த்தனர். உடல் நலம் குன்றிய நிலையில் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவரைக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. மரணிக்கும்போதும் தமிழகத்தின் முதல்வராகவே இறந்தார்.
இதையும் படிங்க: ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…
சினிமாவில் வில்லன்கள் எம்.ஜி.ஆரை அடித்தால் அவரின் ரசிகர்களுக்கு கோபம் வந்துவிடும். எங்கள் வீட்டு பிள்ளை படம் வெளியான நேரத்தில் நம்பியாரின் காரை வழிமறித்து ‘எங்கள் வாத்தியாரை நீ எப்படி சவுக்கால் அடிக்கலாம்?’ என சண்டை போட்டவர்கள்தான் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள். அதேபோல், எம்.ஜி.ஆரின் ராமபுரம் தோட்டத்திற்கு போன இருளர்கள் சிலர் தங்களை தாங்களே சவுக்கால் அடித்தும் கொண்டு எம்.ஜி.ஆரை பதற வைத்தனர்.
இப்படித்தான் ஒரு மதுரை வீரன் திரைப்படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர் இறந்துவிடுவது போல் காட்சி வந்தது. இதைக்கண்டு கொதித்தெழுந்த ரசிகர்கள் தியேட்டரையே கொளுத்திவிட்டனர். அதன்பின் அப்படத்தில் வரும் என்.எஸ்.கிருஷ்ணன் ‘வாத்தியார் நம்மை விட்டு எங்கும் செல்ல வில்லை. மேலோகத்தில் சென்று நம்மை பார்த்து கொண்டே இருப்பார்’ என பேசுவது போல் காட்சி எடுத்து அதில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தான் முதல்வர்… 19 ஆண்டுக்கு முன்னர் கணித்த பட்டுக்கோட்டையார்… இந்த பாடல் தானா?
அதன்பின்னரே அப்படம் தியேட்டரில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், எம்.ஜி.ஆர் நடித்து 1962ம் வருடம் வெளியான திரைப்படம் பாசம். இப்படத்தை டி.ஆர்.ராமண்ணா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இறுதியிலும் எம்.ஜி.ஆர் இறப்பது போல் காட்சி வரும்.
இப்படி காட்சி வைத்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எம்.ஜி.ஆர் பல முறை சொல்லியும் இயக்குனர் கேட்கவில்லை. இது வித்தியாசமான கிளைமேக்ஸ். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என சொல்லியிருக்கிறார். ஆனால், படம் வெளியாகி தோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆர் சொன்னது போலவே அவர் இறப்பது போன்ற காட்சியை அவரின் ரசிகர்கள் ஏற்கவில்லை.
இதையும் படிங்க: ரஜினியின் ஆசையை கேட்டு ஆடிப்போன பாலசந்தர்… கைக்கொடுத்த எம்.ஜி.ஆர்!…