1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நம் நாடு”. இத்திரைப்படத்தை சி.பி.ஜம்புலிங்கம் இயக்கியிருந்தார்.
நாகி ரெட்டி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். எம்.ஜி.ஆரின் சினிமா பயணத்தில் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் அமைந்தது.
ஹிட் அடித்த பாடல்கள்
“நம் நாடு” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”, “நினைத்ததை நடத்தியே முடிப்பவன்”, “வாங்கய்யா வாத்தியாரய்யா” போன்ற பாடல்கள் காலத்தை தாண்டி நிற்கும் பாடல்களாக அமைந்தன.
இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் வாலியே எழுதியிருந்தார். வாலி எம்.ஜி.ஆருக்கு எழுதிய பல கிளாசிக் பாடல்களில் “நம் நாடு” பாடல்களும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை பத்தே நாட்களில் முடித்துவிட்டார்களாம். இது எப்படி சாத்தியமானது என்பதை இப்போது பார்க்கலாம்.
ரீமேக் படம்
எம்.ஜி.ஆர், தயாரிப்பாளர் நாகி ரெட்டியிடம் ‘உங்களது தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதாக இருக்கிறேன். கதை தயார் செய்யுங்கள்” என ஒரு நாள் கூறினாராம். அதன் படி கதாசிரியர் சொர்ணத்தை அழைத்து “எதாவது கதை இருந்தால் கூறுங்கள்” என்றாராம் நாகி ரெட்டி.
இதையும் படிங்க: விஜயகாந்த் கொடை வள்ளலாக மாறியது ஏன்?? இதுக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா??
சொர்ணம் பல கதைகளை கூற, அக்கதைகள் நாகி ரெட்டியை ஈர்க்கவில்லை. அப்போது சொர்ணம், “இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனை மனதில் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கலாமா?” என நாகி ரெட்டியிடம் கேட்டாராம்.
அதனை தொடர்ந்து தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த “கதாநாயகுடு” என்ற திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தனராம். அதன் பின் இத்திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியது.
14 இடங்களில் படப்பிடிப்பு
“நம் நாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு, தயாரிப்பாளர் நாகி ரெட்டியின் விஜயா வாஹினி ஸ்டூடியோஸில்தான் நடைபெற்றது. அந்த ஸ்டூடியோவில் 14 படப்பிடிப்புத் தளங்கள் இருந்தது. அந்த அத்தனை படப்பிடிப்புத் தளங்களிலும் “நம் நாடு” திரைப்படத்திற்காக செட் போடப்பட்டதாம்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காலை 9 மணிக்கு தொடங்கினால் அதற்கு அடுத்த நாள் காலை இரண்டு மணி வரை நடைபெறுமாம். பல நாட்கள் ஸ்டூடியோவிலேயே தூங்கிவிடுவாராம் எம்.ஜி.ஆர்.
அந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எம்.ஜி.ஆரே இயக்கினாராம். எம்.ஜி.ஆர் இல்லாத காட்சிகளை எல்லாம் அத்திரைப்படத்தின் இயக்குனர் ஜம்பு லிங்கம் படமாக்கினாராம். இவ்வாறு இரவும் பகலுமாக உழைத்து இத்திரைப்படத்தை பத்து நாட்களில் முடித்திருக்கிறார்கள்.
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…