ஏற்கெனவே பட்ட அவமானம்!.. வாழ்வா? சாவா? விளிம்பில் இருந்த எம்ஜிஆர்...
அந்த காலங்களில் புகழ்பெற்ற திரைப்பட கம்பெனியான ஜூபிடர் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் ஒரே தேதியில் இரு படங்களை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. அதுவரை யாரும் ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரே நிறுவனம் இரு படங்களை தயாரித்து வெளியிட்டது இல்லையாம். ஆகையால் இந்த படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்திருக்கிறது.
ஆனால் நினைத்தபடி படம் போகவில்லை. இரு படங்களும் பெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றன. ஆகையால் எஸ்.எ.சாமி என்பவரை அழைத்து குறைந்த பட்ஜெட்டில் ஏதாவது ஒரு படம் தயார் செய். அதுவும் புதுமுகங்கள் வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்று சொல்ல எஸ்.ஏ. சாமி எம்ஜிஆரை வைத்து ‘ராஜகுமாரி ’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கெனவெ சாயா என்ற படத்தில் நடித்து பின் பாதியிலேயே விரட்டியடிக்கப்பட்டார் எம்ஜிஆர். அதன் பின் அவருக்கு பதிலாக பி.யு.சின்னப்பா நடித்தார். அதே மாதிரி இந்த படத்தில் தான் கதா நாயகன் என்பதை எம்ஜிஆரால் மகிழ்ச்சியாக கருதமுடியவில்லை. அதன் பின் எஸ்.ஏ.சாமி சொன்னபிறகு தான் நம்பியிருக்கிறார் எம்ஜிஆர்.
அந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மாலதி என்ற நடிகையை தேர்வு செய்தவர் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தாராம். அந்த படத்திற்காக எம்ஜிஆர் வாங்கிய சம்பளம் 2500 ரூபாயாம். மேலும் இந்த படத்தின் தான் முதன் முதலில் நம்பியாரும் எம்ஜிஆருடன் இணைகிறார்.
இதையும் படிங்க : படம் ஃப்ளாப் ஆனதால் காசை திருப்பிக்கொடுத்த விஜயகாந்த்… என்ன மனிஷன்யா!!
அதுமட்டுமில்லாமல் கருணாநிதியின் வசனத்தில் முதன் முதலில் எம்ஜிஆர் நடித்த படமும் இதுதானாம். படத்தை எடுத்தவரைக்கும் ஜூபிடர் முதலாளிகளான மொய்தீனும் சோமுவும் வந்து பார்த்திருக்கின்றனர். ஆனால் இருவருக்கும் படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் இப்படியே விட்டால் அது எம்ஜிஆருக்கும் அவரை வைத்து இயக்கிய சாமிக்கும் பெரிய சிக்கலாக மாறிவிடும் என கருதி,
ஜூபிடர் முதலாளிகள் ஒரு அறிவுரையை வழங்கியிருக்கின்றனர். அதாவது மீதமுள்ள 4000 அடி வரை படம் வளரட்டும். மொத்தப் படத்தையும் பார்ப்போம். அப்போது படம் நல்லா இருந்தால் ரிலீஸ் செய்வோம், இல்லையென்றால் அந்த பிலிமை இங்கேயே குழிதோண்டி புதைத்து விடுவோம் என்ற முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஆனால் எதிர்பார்ப்பையும் மீறி படம் நன்றாக வந்திருந்தது. மேலும் இந்த படம் தான் எம்ஜிஆரை ஒரு நிலையான நடிகர் என்ற அந்தஸ்துக்கு மாற்றியது. மேலும் கதா நாயகனாக எம்ஜிஆர் நடித்த முதல் படமும் இதுதான். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.