Cinema History
முதல்வராகி முதன் முதலாக சொந்த ஊருக்கு போன எம்.ஜி.ஆர்!.. மனம் கலங்கி நின்ற நெகிழ்ச்சி தருணம்!..
தனது வாழ்நாளில் வறுமையின் உச்சத்தையும் புகழின் உச்சத்தையும் பார்த்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே இவரின் வீட்டில் வறுமை தாண்டவமாடியது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையில் வசித்து வந்த போது நீதிபதியாக இருந்த அவரின் அப்பா மரணமடைந்துவிட வாழ்க்கையே மாறிப்போனது.
மகன்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சக்கரபாணியை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த சத்யா அம்மாள் கும்பகோணத்தில் தங்கி உறவினர் ஒருவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். எம்.ஜி.ஆர் 3ம் வகுப்பு வரை அங்கு ஒரு பள்ளியில் படித்தார். அதன்பின் குடும்ப வறுமை காரணமாக நாடகத்திற்கு நடிக்க போய்விட்டார். அவருடன் அவரின் அண்ணன் சக்கரபாணியும் நாடகத்தில் சேர்ந்தார்.
இதையும் படிங்க: சரோஜாதேவியை வெளியே போக சொல்லுங்க!.. எம்.ஜி.ஆர் சொன்னதற்கு காரணம் இதுதான்!…
எம்.ஜி.ஆர் மற்றும் சக்கரபாணியின் வருமானத்தில் அவர்களின் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையிலிருந்து மீண்டு வந்தது. 30 வருடங்கள் நாடகத்தில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் தனது 37வது வயதில் சினிமாவில் நுழைந்தார். 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ராஜகுமாரி படம் மூலம் கதாநாயகனாக மாறினார். சினிமாவில் நடிக்க துவங்கியபோதே அம்மாவை அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிவந்தார் எம்.ஜி.ஆர்.
சினிமாவில் பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய ஆளுமையாக மாறினார். திரையுலகில் சக்கரபாணியை பெரியவர் எனவும், எம்.ஜி.ஆரை சின்னவர் எனவும் அழைத்தார்கள். ஒருகட்டத்தில் அரசியலிலும் நுழைந்த எம்.ஜி.ஆர் தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார்.
இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..
கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்றபின் தனது சொந்த ஊர் பக்கம் போகவில்லை எம்.ஜி.ஆர். ஒருமுறை முதல்வரான பின் கும்பகோணத்தில் நடந்த கோவில் மகாமக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அங்கு சென்றார். சிறு வயதில் வாழ்ந்த ஊர் என்பதால் ஆவலுடன் அங்கே போன எம்.ஜி.ஆர் ஒரு தொழிலதிபரின் வீட்டில் தங்கினார். எம்.ஜி.ஆர் சிறுவனாக இருந்தபோது அந்த வீட்டில்தான் எம்.ஜி.ஆரின் தாய் வேலை செய்தார்.
இரவு நேரத்தில் மகாமக குளத்தில் குளித்துவிட்டு தான் 3வது வரை படித்த ஆணையடி பள்ளிக்கு செல்கிறார். ஒரு 15 நிமிடம் நடைக்கு பின் அந்த பள்ளியை அடைந்தார். அப்போது அந்த பள்ளி சரியான மேற்கூரை கூட இல்லாமல் சிதிலமடைந்து இருந்தது. இதைப்பார்த்து கலங்கிப்போன எம்.ஜி.ஆர் அடுத்த நாள் சென்னை வந்தபின் அந்த பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து அங்கு கட்டிடம் கட்ட உத்தரவு பிறப்பித்தார். தன்னால் படிப்பை தொடரமுடியவில்லையே என்கிற அவரின் ஏக்கம் அங்கு மற்ற குழந்தைகள் படிக்க புதுக்கட்டிடம் கட்டி கொடுத்தபின் கொஞ்சம் சாந்தம் அடைந்தது.