இசையமைப்பாளருக்கு வந்த திடீர் ஆசை!.. அதைக்கேட்டு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?...
எம்.ஜி.ஆர் சரித்திர திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது அவரின் பல திரைப்படங்களுக்கு எஸ்.எம். சுப்பையா என்பவர் இசையமைத்து வந்தார். மர்மயோகி, மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே என எம்.ஜி.ஆரின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் சுப்பையா.
ஒருமுறை எம்.ஜி.ஆர் வீட்டின் வெளியே சுப்பையாவும், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவரும், எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவருமான ரவீந்தர் என்பவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ‘இதுபோல மழை பெய்யும் போது ஃபிளாஸ்க் நிறைய காபி மற்றும் சாப்பிடுவதற்கு கேக், சிப்ஸ், பக்கோடா ஆகியவற்றை எடுத்துகொண்டு காரில் பயணிக்க வேண்டும். ஜாலியாக மழையை ரசித்துக்கொண்டே அவற்றை சாப்பிட வேண்டும்’ என ரவீந்தரிடம் இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா கூறினாராம்.
இது உள்ளே இருந்த எம்.ஜி.ஆரின் காதில் விழுந்தது. உடனே, தனது கார் ஓட்டுனர் ராமசாமி என்பவரை அழைத்து ஏதோ கூறி வெளியே அனுப்பினாராம். அரை மணி நேரம் கழித்து ஓட்டுனர் வந்துவிட, தயாரான எம்.ஜி.ஆர் சுப்பையாவிடம் ‘வாங்கண்ணே போவோம்’ என்றாராம்.
அதற்கு சுப்பையா ‘எங்கே?’ எனக்கேட்க, நீங்கள்தான் மழை பெய்யும் போது காபி, கேக், பக்கோடா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள். எனவேதான், ராமசாமியை கடைக்கு அனுப்பி அவற்றையெல்லாம் வாங்கி வர சொன்னேன். மற்றவர்களின் ஆசையை நிறைவேற்றி பார்ப்பதில் எனக்கு எப்போதும் பிடித்த விசயம்’ எனக்கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். அனைவரும் சுப்பையா ஆசைபட்ட படியே ஜாலியாக மழையில் காரில் ஊரை சுற்றி வந்தனராம்.
இதையும் படிங்க: ஒரு சினிமாவின் பட்ஜெட்டை தீர்மானிப்பது யார் தெரியுமா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!