எம்ஜிஆர் கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்த மூதாட்டி!.. என்ன சொன்னாரு தெரியுமா?

by Rohini |   ( Updated:2023-05-22 12:56:58  )
mgr
X

mgr

தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான கொடை வள்ளலாக மக்கள் மனதில் என்றுமே இன்று வரைக்கும் நிலைத்து நிற்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். இவர் ஆற்றிய நற்பணிகள் ஏராளம். உதவி என்று வருபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிற எல்லாவற்றையும் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவதையே தன் வாழ்நாள் விருப்பமாக கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

mgr1

mgr1

அதனாலேயே அரசியலிலும் அவரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. மக்களுக்கு ஒரு நல்ல தலைவராக என்றுமே இருந்து வந்தார் எம்ஜிஆர். அரசியலில் இருக்கும் போதும் மக்களுக்கு என்ன தேவை என்பதை தன் எண்ணமாகவே கொண்டு வந்தார்.

மொத்தத்தில் எம்ஜிஆர் மக்களுக்காகவே வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்த மாட்டுக்கார வேலன் என்ற திரைப்படம் எந்த அளவு வெற்றி பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் ஒரு பெரிய விழாவாக எடுத்து கொண்டாடினர்.

அந்தப் படத்திற்கான வெற்றி விழா சேலத்தில் இருக்கும் ஒரு திரையரங்கில் நடத்தப்பட்டது. அப்போது மேடையில் எம்ஜிஆர் உடன் பல நடிகர்கள் உட்கார்ந்து இருக்க அந்த திரையரங்க உரிமையாளர் ஒரு மூதாட்டியை எம்ஜிஆருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த மூதாட்டி மாட்டுக்கார வேலன் திரைப்படத்தை 100 முறை பார்த்திருக்கிறாராம்.

mgr2

mgr2

அதற்கான டிக்கெட்டுகள் நூறையும் எம்ஜிஆர் இடம் காட்டினார். அந்த மூதாட்டி கீழே இருக்க மேடையில் இருந்த எம்ஜிஆர் கீழே வந்து அந்த மூதாட்டியை மேடையில் ஏற்றினார். அதோடு தன் அருகாமையிலும் உட்கார வைத்தார். மேலும் அந்த மூதாட்டி இடம் எம்ஜிஆர் இந்த படத்தை ஏன் 100 முறை பார்க்கணும் என கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மூதாட்டி நான் கீரை விற்று பொழப்பை நடத்துகின்றேன். தினமும் மூன்று ரூபாய் எனக்கு கிடைக்கும் .அதில் ஒரு ரூபாயை வைத்து இந்த படத்தை நான் தினமும் பார்க்கிறேன். நான் விதவையாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. இந்த படத்தில் உங்களுடைய பால் வடியும் முகத்தை பார்த்தாலே எனக்கு பல நூறு ஜென்மம் கிடைத்த புண்ணியம் மாதிரி இருக்கிறது. அதனாலேயே பார்த்தேன் என அந்த மூதாட்டி கூறியிருக்கிறார்.

mgr3

mgr3

உடனே எம்ஜிஆர் நூறு முறை பார்த்து 100 ரூபாயை நீங்கள் செலவழித்து இருக்கிறீர்கள். அதனால் "இந்தாங்க ஆயிரம் ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள்" என எம்.ஜி.ஆர் கொடுத்திருக்கிறார் .ஆனால் அந்த மூதாட்டி அதை வாங்க மறுத்தாராம் .உடனே எம்ஜிஆர்" உங்கள் மகன் கொடுக்கிறேன், வாங்கிக் கொள்ளுங்கள் "என்று சொன்ன பிறகுதான் அந்த மூதாட்டி அந்த ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டாராம் .இந்த செய்தி இப்பொழுது இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

Next Story