எம்.ஜி.ஆரின் 100வது படத்துக்கு போட்டி போட்ட தயாரிப்பாளர்கள்!.. ஆனால் நடந்தது இதுதான்!...

திரையுலகில் வறுமையின் பிடியில் சிக்கி நாடகங்களில் நடிக்க துவங்கி சினிமா வாய்ப்புக்காக போராடி சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்தான் எம்.ஜி.ஆர். மெல்ல மெல்ல கதாநாயகனாக நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். ஏராளமான சரித்திர கதைகளில் நடித்து வாள் வீச்சு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருபக்கம் சிவாஜி கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். எனவே, சண்டை காட்சிகள் நிறைந்த படம் எனில் அது எம்.ஜி.ஆர் படம்தான் என மாறிப்போனது.

mgr

mgr

ஒருகட்டத்தில் யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், எந்த நடிகை நடிக்க வேண்டும் என்பதையே எம்.ஜி.ஆர்தான் முடிவு செய்தார். இவரின் கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். திரையுலகை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்ன நினைக்கிறாரோ அது நடக்குமளவுக்கு நிலைமை இருந்தது. அதுவும், அவர் முதலமைச்சர் ஆன பின் சொல்லவே தேவையில்லை. அவர் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது என எல்லாமே மாறிப்போனது.

எல்லா நடிகர்களுக்கும் 100வது படம் என்பது முக்கியமானது. எம்.ஜி.ஆரும் 100வது படத்தை நெருங்கிய போது அப்படத்திற்கு தயாரிப்பாளர் யார்?.. இயக்குனர் யார்? என திரையுலகில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் எகிறியது. அந்த படத்தை தயாரிக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என திரையுலகில் பேச துவங்கினர். தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் எம்.ஜி.ஆர் 100வது படத்தை தயாரிக்க வரிசையில் காத்திருந்தன. ஆனால், எம்.ஜி.ஆர் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தார்.

MGR 3

அதற்கு காரணம் இருக்கிறது. ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் மீது அவருக்கு அதிக மரியாதை இருந்தது. திரையுலகில் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் வாசன். அவரின் ஸ்டுடியோவில் அவர் தயாரிக்கும் படங்களை தவிர வேறு எந்த படத்தின் படப்பிடிப்பையும் அவர் அனுமதிக்கமாட்டார். எந்த நடிகரையும் தேடி சென்று கால்ஷீட் கேட்க மாட்டார்.

oli vilakku

oli vilakku

ஆனால், அப்படிப்பட்ட வாசனை எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களை வைத்திருந்த அபிமானம் மாற்றிப்போட்டது. எம்.ஜி.ஆர் படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் தனது ஸ்டுடியோவை கொடுத்தார். அப்போது எம்.ஜி.ஆரை பார்க்க அந்த ஸ்டுடியோவில் காத்திருந்த ரசிகர்களை பார்த்து பிரமித்து போனார். மேலும், முதன்முறை அந்த ஸ்டுடியோவுக்கு எம்.ஜி.ஆர் வந்த போது வாசன் அவரை நேரில் சென்று பார்த்தார். மேலும், உங்களின் 100வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பை எனக்கு தர வேண்டும் என அவரே எம்.ஜி.ஆரிடம் கேட்டார். உடனே சம்மதம் சொன்னார் எம்.ஜி.ஆர். அப்படி உருவான திரைப்படம்தான் ஒளிவிளக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூர்யா-ஜோதிகா மும்பை செட்டில் ஆனதுக்கு இதுதான் காரணமா?.. சிவக்குமாரின் நிலைமை?..

Related Articles
Next Story
Share it