More
Categories: Cinema History Cinema News latest news

விழாவிற்கு தாமதமாக வந்த கமல் – கொந்தளித்த எம்ஜிஆர்.. பயந்து நடுங்கிய அதிகாரிகள்!

தமிழ் சினிமாவில் மனித நேயத்தின் உச்சமாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆர். தனக்காக வாழாமல் பிறரின் நலனுக்காகவே வாழ்ந்த உத்தம தலைவன் எம்ஜிஆர். மனிதர் வடிவில் வந்த ஒரு தெய்வ பிறவி. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நாம் பெற்ற பெரும் பேறு என்று அவர் காலத்தில் இருந்த பல ரசிகர்கள் இன்று வரை சொல்வதும் உண்டு.

அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து அவர் மறைந்தாலும் அவரின் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. அரசியலிலும் ஒரு சினிமா நடிகர் இந்த அளவிற்கு மக்களை ஆட்கொள்ள முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பெருந்தலைவனாக உயர்ந்தார். மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்ததனாலேயே அரசியலிலும் அவரால் கால் தடம் பதிக்க முடிந்தது.

Advertising
Advertising

kamal1

அரசியலுக்குள் வந்த பிறகு அவரைச் சுற்றி அதிகாரிகள் பலரும் அவரை வட்டம் போட்டு கொண்டு இருந்தனர் .அந்த அளவுக்கு அவரின் பாதுகாப்பும் அவர் மீது இருந்த அக்கறையும் அதிகமாகவே இருந்தன. அதில் ஒரு அதிகாரி எம்ஜிஆரை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் எம்ஜிஆர் காலத்தில் பத்திரிக்கை துறையின் நிறுவனராக இருந்தவர். அவர்தான் எம்ஜிஆரை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறியிருக்கிறார்.

அதாவது தெலுங்கு நடிகர் பாலமுரளி கிருஷ்ணா தன்னுடைய தெலுங்கு கீர்த்தனையை தமிழில் மொழியாக்கம் செய்து அதை ஒரு கேசட்டாக வெளியிட விரும்பினார். அந்த கேசட் வெளியீட்டு விழாவை கலைவாணர் அரங்கத்தில் நடத்த விரும்பினார். அந்த விழாவிற்கு பல வித்வான்கள், நடிகர் கமல், அப்போதைய முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

kamal2

எம்ஜிஆர் சரியாக மாலை 6.30 மணி அளவில் அந்த விழாவிற்கு வருகை புரிந்தாராம். ஆனால் கமல் கோடம்பாக்கத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் வழியில் ஒரு டிராபிக்கில் மாட்டிக் கொண்டாராம். நிமிடங்கள் போக போக எம்ஜிஆரின் முகம் வாடியதாம். உடனே விழாவில் இருந்த ஒருவரை அழைத்து விழாவை ஆரம்பியுங்கள் என்று கோபமாக சொன்னாராம். அவரின் கோபத்தை பார்த்த அதிகாரிகளும் நடுங்கிவிட்டனராம்.
அதில் ஒரு அதிகாரி வரவேற்புரை நடத்துவதாக இருந்த நிலையில் எம்ஜிஆரின் கோபத்தை பார்த்து அவருக்கு மயக்கமே வந்துவிட்டதாம். உடனே இந்த பத்திரிக்கை நிறுவனர்தான் வரவேற்புரை ஏற்று நடத்தினாராம்.

Published by
Rohini

Recent Posts