எம்.ஜி.ஆர் இல்லாமல் எடுக்கப்பட்ட டூயட் காட்சி!..கோபத்தின் உச்சிக்கே சென்ற பொன்மனச்செம்மல்!..
பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என அனைவராலும் அன்பால் அழைக்கப்படுபவர் நடிகர் எம்.ஜி.ஆர் ஆகிய எம்.ஜி.ராமச்சந்திரன். சினிமாவில் அவ்வளவு எளிதாக நுழையவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு பல நாடக மேடைகள் ஏறி படிப்படியாக உயர்ந்து இன்றளவும் மக்கள் மனதில் ஒரு கொடை வல்லளாக வளர்ந்து நிற்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்த எம்.ஜி.ஆருக்கு பெரும்பாலான படங்கள் இவருக்கு பெரும் கவுரவத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்திருக்கிறது. அந்த வகையில் அமைந்த படம் தான் ‘அலிபாவும் 40 திருடர்களும் ’ திரைப்படம்.
இதையும் படிங்க : “பிளடி நான்சென்ஸ்”… வசந்தபாலனை வாய்க்கு வந்தபடி திட்டிய கமல்ஹாசன்… ஓட்டம் பிடித்த இயக்குனர் ஷங்கர்…
இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருப்பார். இதில் நடந்த யாருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவலை நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் நம்மிடையே பகிர்ந்தார். அதாவது இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சிகளுக்கு முன்னால் ஒரு பாடல் காட்சியை எடுக்க எம்.ஜி.ஆர் கால்ஷீட் தரவில்லையாம்.
ஆனால் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் படத்தின் இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் இருக்க வேறுவழியின்றி டூப் போட்டு எடுத்துவிடலாம் என்று முடிவுக்கு வந்தாராம். டி.ஆர்.சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளரும் ஆவார். அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடிக்க வந்தவர் நடிகர் கரடிமுத்து. ஒரு வழியாக அந்த பாடல் காட்சியை எடுத்து விட்டார் இயக்குனர். ஒரு சமயம் எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் ‘ஆமாம், ஒரு பாடல் காட்சி நிலுவையில் இருக்கிறதே? அதை எடுத்து விடலாமா? ’ என்று கேட்க
இயக்குனரோ அதெல்லாம் எடுத்தாகிவிட்டது. போய் எடிட்டிங்கில் போய் பாருங்கள் என்று கூறினாராம். இதை கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு ஒரே அதிர்ச்சி. அது எப்படி சாத்தியமாகும் என நினைத்து எடிட்டிங்கில் போய் பார்த்திருக்கிறார். அதில் எம்.ஜி.ஆர் யார்? டூப் யார் என தெரியாத அளவுக்கு தத்ரூபமாக எடுத்து முடித்து விட்டாராம் இயக்குனர். இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் அதிலிருந்து மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு இனி படம் பண்ணக்கூடாது என முடிவெடுத்தாராம்.