எம்ஜிஆருக்கு சிங்கப்பூர் ரசிகர் கொடுத்த அந்த பரிசு! திருப்பிக் கொடுத்த சின்னவர்.. அங்கதான் ட்விஸ்ட்
தமிழ் சினிமாவில் இன்று வரை போற்றத்தக்க நடிகராக அனைவராலும் பாராட்டப்படும் நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவருக்கு இணை அவரே என்று சொல்லுமளவுக்கு தான் கொண்ட கொள்கையில் துளி அளவும் மாறாது உத்தமனாக வாழ்ந்து மறைந்த ஒரு ஒப்பற்ற கலைஞன் எம்ஜிஆர். அவரின் பெருமையை இன்று வரை நாம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி ஒரு கலைஞனை தமிழ் சினிமா பெற்றெடுத்ததை எண்ணி சினிமா இன்று வரை பெருமைப்பட்டு கொண்டிருக்கின்றது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக என பன்முகம் கொண்ட கலைஞராக இருந்து வந்தார் எம்ஜிஆர். அவரின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் எது என்பதை அவர் நடிக்கும் படங்களின் மூலம் தெள்ளத்தெளிவாக காட்டினார்.
இதையும் படிங்க : வாய்ப்புக் கேட்டா இததான் பண்ணுவாரு! வடிவேலுவை பற்றி முதன் முதலாக நடிகை சொன்ன பகீர் தகவல்
மது, புகை என எவற்றையும் தன் படங்களில் அவர் மூலம் காட்டியதும் இல்லை. கோயில் வழிபாடுகளையும் அந்த அளவுக்கு காட்டியதும் இல்லை. மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவராக இருந்து போயிருக்கிறார் எம்ஜிஆர். இந்த நிலையில் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் கதை எழுதி வந்தவர் ரவீந்திரர். அவர் எம்ஜிஆரை பற்றி சில விஷயங்களை அவர் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
அதில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவத்தை வெளியிட்டிருந்தார். அதாவது எம்ஜிஆர் மீது அதிக பற்று கொண்ட சிங்கப்பூர் டெய்லர் ஒருவர் அவர் நடத்தி வந்த கடைக்கும் எம்ஜிஆர் பெயரை வைத்து கடையை நடத்தி வந்தாராம். ஒரு சமயம் எம்ஜிஆரை பார்க்க இந்தியா வந்திருக்கிறார். எம்ஜிஆரையும் சந்தித்திருக்கிறார்.
அப்போது எம்ஜிஆருக்கு அன்பளிப்பாக ஒரு கோட் ஒன்றை பரிசாக கொடுத்தாராம். அதற்கு எம்ஜிஆர் அளவு எப்படி தெரியும்? என கேட்க ரொம்ப வருஷமாக உங்களை பார்க்கிறேன், ஒரு மதிப்பில் தைத்திருக்கிறேன் என்று சொல்லி கொடுத்தாராம். கூடவே இன்னொரு அன்பளிப்பையும் கொண்டு வந்திருக்கிறேன், வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி தான் கொண்டு வந்த 20000 ரூபாயை கொடுத்தாராம்.
அதற்கு எம்ஜிஆர் இது எதற்கு என கேட்க, இல்ல உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பெயரில் கடையை நடத்தி வந்தேன், நூற்றுக்கு ஒரு டாலர் வீதம் உங்க பங்கு சேர்ந்து இந்த பணம் என்று சொன்னாராம். உடனே எம்ஜிஆர் அந்தப் பணத்தை தொட்டு முத்தமிட்டு அதோடு எம்ஜிஆர் 5000 ரூபாய் சேர்த்து அந்த டெய்லரிடம் கொடுத்தாராம்.
இதையும் படிங்க : ஆழம் தெரியாம விட்டுடோங்க! நீதிமன்றம் வரை சென்ற சந்தானம் படம் – 4 வருஷமா இப்படி ஒரு பிரச்சினையா?
‘இது என் பேர்ல கடை வச்சு தோல்வியடையாமல் ஜெயிச்சதுக்கு நான் தருகிற வெகுமதி இது’ என்று சொன்னாராம்.இப்படி எம்ஜிஆர் வாழ்வில் நடந்த சின்ன சின்ன விஷயங்கள், அவரின் தயாள குணம் என ரவீந்திரன் அவரது கட்டுரையில் எழுதியிருக்கிறாராம்.