ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த ஜெய்சங்கர்.. திடீரென எம்ஜிஆரிடம் இருந்து அழைப்பு!.. என்ன கேட்டார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருந்து வரும் முறையை தற்காலத்தி்ற்கு ஏற்ப மாற்றியவர் நடிகர் ஜெய்சங்கர். அப்பொழுதெல்லாம் சினிமா கலைஞர்கள் யாரையாவது பார்க்கும் போது அண்ணே அண்ணே என்று தான் அழைப்பார்கள். அந்த முறையை ஹாய் ஹலோ என்று கூப்பிடும் புதிய முறைக்கு வித்திட்டவர் ஜெய்சங்கர் தான்.
மேலும் எம்ஜிஆர் , சிவாஜி படப்பிடிப்புகள் என்றால் சூட்டிங்கில் படப்பிடிப்பு போக மீதமுள்ள நேரம் மிகவும் அமைதியாக இருக்குமாம். ஆனால் ஜெய்சங்கர் படப்பிடிப்பில் மட்டும் தான் கலகலவென இருக்குமாம். ஜெய்சங்கர் தன்னை சுற்றி இருக்கும் நபர்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்க கூடிய ஆளாகவே இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : வெட்கமே இல்லாமல் அஜித்திடம் கேட்டேன்!.. துணிவு படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை….
ஜெய்சங்கருடன் அதிகமாக நடித்த நடிகைகள் என்றால் ஏ.எல்.விஜயலட்சுமி, ஜெயலலிதா போன்ற நடிகைகள் தான். இதில் ஜெயலலிதாவும் ஜெய்சங்கரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்த படம் ‘ நீ’. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி மற்றுமொரு படத்தில் இணைந்தது.
அந்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது ஜெய்சங்கருக்கு எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வந்ததாம். உடனே ஜெய்சங்கரும் கிளம்பி போய் எம்ஜிஆர் இருந்த இடத்திற்கு செல்ல அங்கு எம்ஜிஆரும் ஒரு படப்பிடிப்பில் இருந்தாராம். அதனால் மதிய இடைவேளை சமயம் ஜெய்சங்கரை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு போய் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதை கேட்டதும் ஜெய்சங்கருக்கு தூக்கி வாறி போட்டிருக்கிறது. என்னவென்றால் ‘ நீ ஏ.எல்.விஜயலட்சுமியை திருமணம் செய்யப் போகிறாயா’ என்று கேட்டாராம். ஏனெனில் அந்த காலங்களில் ஜெய்சங்கரும் விஜயலட்சுமியும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்ததனால் ஊடகங்கள் இவர்களை பற்றி கிசுகிசுக்களை எழுதி தள்ளியிருக்கின்றன.
இதையும் படிங்க : மனதை மயக்கும் ரம்மியமான பாடல்களால் கவரப்பட்ட கிராமியப் படம் இதுதான்..!
இதனால் தான் எம்ஜிஆரும் இந்த கேள்வியை கேட்க அதற்கு ஜெய்சங்கர் இல்லை, நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறோம் என்று கூறியிருக்கிறார். உடனே எம்ஜிஆர் நீ திருமணம் செய்கிறாயோ இல்லையோ எதுவானாலும் சீக்கிரம் ஒரு முடிவை எடு, ஏனென்றால் வெளியில் வேற மாதிரி பேசுகிறார்கள் என்று அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
உடனே ஜெய்சங்கர் எம்ஜிஆரின் அறிவுரையை கேட்டு தனது பெற்றோர் பார்த்த கீதா என்ற பெண்ணை மணந்தாராம். ஆனால் ஜெய்சங்கர் திருமணத்திற்கு எம்ஜிஆரால் வரமுடியாத சூழ்நிலை. ஆனால் ஜெய்சங்கரின் தம்பி திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினாராம். இந்த சுவாரஸ்ய செய்தியை சித்ரா லட்சுமணன் கூறினார்.