Cinema History
உன்னால புரொடியூசர் நஷ்டம் ஆகணுமா?… வெண்ணிறாடை நிர்மலாவிற்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்…
வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நிர்மலா. வெண்ணிறாடை நிர்மலா என அழைக்கப்படும் இவர் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வெள்ளிதிரை மட்டுமல்லாமல் சின்னதிரையில் ஜொலித்தவர்.
இவரை பெரும்பாலும் நாம் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் கான முடியும். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். அன்றைய காலத்தில் அனைவராலும் கவரப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நாளை நமதே, இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன் போன்ற திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்துள்ளார். பின் இவர் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய ராஜராஜேஸ்வரி, தெய்வம் தந்த வீடு போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க:கோபத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்!.. பயந்து போன நம்பியார்… ஓடி வந்த எம்.ஜி.ஆர்..
ஒரு முறை டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு இவரையும் கமல்ஹாசனையும் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க அழைத்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவை பிரிட்டிஷ்காரர்கள் பனிக்கட்டியின் மேல் வைத்து துன்புறுத்தும் காட்சியின் நடித்துள்ளார்.
அதேசமயம் எம்.ஜி.ஆருடன் ஒரு திரைப்படத்தின் அதெ போலவே பனிகட்டியுடனான காட்சி இருந்துள்ளது. இந்த காட்சிகளில் நடித்ததால் நிர்மலாவிற்கு இருமல், ஜலதோஷம் இருந்துள்ளது. நிர்மலா இரு படங்களின் படபிடிப்புகளையும் முடித்துவிட்டு டெல்லி செல்ல தயாராகியுள்ளார். ஆனால் படபிடிப்பு முடிந்துவுடன் இவரது பொருட்களை காணவில்லையாம். எங்கு என அனைவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் அது சின்னவர் அறையில் உள்ளது என கூறியுள்ளனர். அங்கு சென்ற நிர்மலாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. எம்.ஜி.ஆர் நிர்மலாவை டெல்லிக்கு செல்லகூடாது என கூறிவிட்டாராம்.
இதையும் படிங்க:எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…
அவ்வாறு சென்றால் உனக்கு நிமோனியா வருவதற்கு வாய்ப்பு அதிகம் அதனால் கண்டிப்பாக செல்ல கூடாது என கூறிவிட்டாராம். தமிழ்நாட்டின் சார்பில் நானும் கமலும் செல்ல வேண்டும். கமலுக்கு படபிடிப்பு இருப்பதால் நான் கண்டிப்பாக செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். நீ சென்று உனக்கு ஏதும் ஆகிவிட்டால் நீ நிம்மதியாய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். ஆனால் உன் படத்தின் தயாரிபாளர்தான் நஷ்டப்ட வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இறுதிவரை எம்.ஜி.ஆர் விடவில்லையாம். செய்வதறியாது நின்ற நிர்மலா எம்.ஜி ஆரின் பேச்சை மீறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். தன் நலத்தை காட்டிலும் பிறர் நலத்தையும் பேணுவதில் எம்.ஜி.ஆர் சிறந்தவர் என சமீபத்தில் அளித்த பேடி ஒன்றில் வெண்ணிற ஆடை நிர்மலா கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…