கோவை சரளாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர்!.. எதற்காக தெரியுமா?...
நடிகர் எம்.ஜி.ஆர் பலருக்கும் பல வகைகளில் உதவிகளை செய்தவர். திரைப்படத்துறையினர் மட்டுமின்றி அவர் எங்கெல்லாம் வறுமையை பார்க்கிறாரோ அவர்கள் எல்லோருக்கும் உதவி செய்தவர். அதனால்தான் அவரை பொன்மன செம்மல் எனவும், வள்ளல் எனவும் மக்கள் அழைத்தனர். உதாரணத்திற்கு, அவர் காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது வழியில் ஒரு ஒருவர் சந்திக்கும் பிரச்சனையை எம்.ஜி.ஆர் பார்த்தால் அவருக்கு உதவி விட்டுதான் அங்கிருந்து கிளம்புவார் எம்.ஜி.ஆர்.
ஆயிரக்காணக்கான ஏழை குழந்தைகளையும் எம்.ஜி.ஆர் படிக்க வைத்துள்ளார். ஒருமுறை கோவையில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு சிறுமி சுட்டித்தனமாக பேசி நடித்துக்கொண்டிருந்தார். அவரை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக, அவரை பாராட்டி அவரின் பின்புலம் பற்றி விசாரித்தார். அப்போது அவர் ஒரு ஏழை சிறுமி என தெரிந்து கொண்டார். எனவே, தனது சொந்த செலவிலேயே அந்த சிறுமியை படிக்க வைத்தார்.
பல வருடங்களுக்கு பின் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவில் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கினார். எம்.ஜி.ஆர். அப்போது ஒரு நடிகையை பார்த்த போது அவர்தான் அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சிறுமி என்பதை கண்டு கொண்டார். அதோடு, அவரை மேடையிலேயே திட்ட துவங்கினார்.
எம்.ஜி.ஆர் ஏன் ஒரு துணை நடிகையை இப்படி திட்டுகிறார் என்பது புரியாமல் அனைவரும் பார்த்தனர். எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய அந்த நடிகை வேறு யாருமல்ல. அவர்தான் தனது காமெடி நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் கோவை சரளா. அதாவது ‘அதாவது நீ சினிமாவுக்கோ, அரசியலுக்கோ வரக்கூடாது’ என சொல்லித்தான் அவரை படிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவருக்கு சினிமாவுக்கு வந்துவிட்டது பிடிக்கமால் அவரை எம்.ஜி.ஆர் திட்டியுள்ளார் என்பது பின்னர்தான் எல்லோருக்கும் தெரியவந்தது.
இதையும் படிங்க: யாராலும் செய்ய முடியாத அசாத்திய செயலை அசால்ட்டாக செய்து காட்டிய நாகேஷ்… வேற லெவல் !!