நான் முதல்வராகி விடுவேன்!. தியேட்டரில் அழுத எம்.ஜி.ஆர்.. நம்பிக்கை கொடுத்த அந்த பாடல்!...
நாடகங்களில் பல வருடங்கள் நடித்து சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். சின்ன சின்ன வேடங்களில் கிடைத்து படிப்படியாக முன்னேறியவர். சரித்திர படங்களில் ஹீரோவாக நடித்து, வாள் சண்டை போட்டு, சண்டை காட்சிகள் மூலமே ரசிகர்களை தன் பக்கம் வளைத்தவர். அறிஞர் அண்ணாவின் தமிழ் மற்றும் பேச்சாற்றலை கண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர். அண்ணா மீது மிகப்பெரிய அன்பையும், மரியாதையும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.
அண்ணாவின் மறைவுக்கு பின் கலைஞர் கருணாநிதியை ஆதரித்தார். அவருக்காக பிரச்சாரமெல்லாம் செய்திருக்கிறார். பொருளாளர் பதவியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், எம்.ஜி.ஆரை கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கிவிட எம்.ஜி.ஆர் அதிமுக எனும் புதிய கட்சியை துவங்கி தேர்தலை சந்தித்து முதல்வரானார். தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.
எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களில் தன்னை பற்றி புரமோட் செய்வது போல பல பாடல்களை வைத்தார். இதற்கு எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் கவிஞர் வாலி. நான் ஏன் பிறந்தேன்.. நாட்டுக்கு நலமென புரிந்தேன், நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.. போன்ற பாடல் மூலம் எம்.ஜி.ஆரை அவர் புரமோட் செய்தார். இதன் மூலம் நான் முதல்வரானால் நன்றாக ஆட்சி நடத்துவேன். என் ஆட்சியில் ஏழை மக்கள் சுகமாக வாழ்வார்கள் என தான் நடிக்கும் படங்களில் காட்சியும், வசனமும், பாடல்களையும் எம்.ஜி.ஆர் வைத்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தோட்டத்தில் எலும்புக்கூடுகள் வந்தது எப்படி?.. திக் திக் பின்னணி இதுதான்!..
1960-களின் இறுதியிலேயே எம்.ஜி.ஆருக்கு முதல்வராகும் ஆசை வந்துவிட்டது. ஆனால், நாம் ஓட்டு போட சொன்னால் மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டால் போடுவார்களா?’ என்கிற சந்தேகம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.
தீவிர அரசியலில் இறங்குவதற்கு முன் ஒரு அரசியல் படத்தை எடுத்து பார்ப்போம். மக்களுக்கு எந்த அளவுக்கு நமக்கு ஆதரவு கொடுப்பார்கள் என் தெரிந்து கொள்வோம் என கணக்குப்போட்ட எம்.ஜி.ஆர் நாகிரெட்டியை அழைத்து ‘என்னிடம் ஒரு கதை இருக்கிறது. முழுக்க அரசியல் கதை. நீங்கள் தயாரிக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறேன்’ என சொல்ல அதற்கு நாகிரெட்டி ‘ஏன் நீங்களே தயாரித்து எடுக்கலாமே’ என சொல்ல எம்.ஜி.ஆரோ ‘இல்லை அது நான் தயாரித்தால் நன்றாக இருக்காது’ என சொல்லி அவரை தயாரிக்க வைத்தார். எம்.ஜி.ஆர் மிகச்சிறப்பாக திட்டமிடுவார் என்பதற்கு இதுவே சாட்சி.
அப்படி உருவான திரைப்படம்தான் நம் நாடு. ஊழல்வாதி சேர்மனுக்கு எதிராக தேர்தலில் நின்று நகராட்சி சேர்மனாக வெற்றி பெறுவது போல் கதை அமைத்தார். இந்த படம் 1969ம் வருடம் நவம்பர் மாதம் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர் ரிலீஸான முதல்நாள் நாகிரெட்டியை அழைத்துக்கொண்டு சென்னையில் ஒரு தியேட்டருக்கு மாலை காட்சிக்கு சென்றார்.
அந்த படத்தில் ‘வாங்கய்யா வாத்தியார் ஐயா’ பாடல் வந்தபோது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். மேலும், அந்த பாடலை ஒன்ஸ்மோர் கேட்டு கத்த அந்த பாடல் மட்டும் மீண்டும் ஒளிபரப்ப பட்டது. இதைப்பர்த்த எம்.ஜி.ஆரின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. நாகிரெட்டியை கட்டிப்பிடித்து ‘நான் ஜெயித்து விடுவேன். ஜெயித்து விடுவேன்’ என உணர்ச்சி வசப்பட்டாரம்.
அதன்பின்னரே அவர் அரசியலில் இறங்கி ஆட்சியையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப பார்த்து ரசித்த விஜயகாந்த் பாடல்!.. அட இது தெரியாம போச்சே!..