எம்ஜிஆரின் மானத்தை காப்பாற்றிய சிவாஜி படம்!..தவறை திருத்திக் கொண்டு வெற்றி வாகை சூடிய சம்பவம்!..
தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவான்களாக இருந்து சினிமாவை தலை தூக்கி நிறுத்தியவர்கள் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.இருவரும் ஆரம்பகாலங்களில் நாடகங்களில் நடித்து அதன்மூலம் சினிமாவில் பிரபலமானவர்கள் தான். மேலும் நல்ல நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
அந்தக் காலத்தில் அதிக பொருட்செலவில் கிட்டத்தட்ட 5 வருடங்களாக எடுக்கப்பட்ட படம் சந்திரலேகா. அந்த படத்திற்கு பிறகு அதிக பொருட்செலவில் எடுத்த படம் எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படம். இந்த படத்தை எம்ஜிஆரே இயக்கி தயாரித்திருந்தார். ஆனால் படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளானார்.
ஒரு வேளை படம் தோல்வியடைந்திருந்தால் அவரின் நிலைமை படுமோசமாக இருந்திருக்கும். அப்படி பட்ட சூழ் நிலை வராமல் தடுத்த படம் சிவாஜியின் உத்தமபுத்திரன் திரைப்படம். உத்தமபுத்திரன் படம் ரிலீஸான நேரம் அது. அதை பார்த்த எம்ஜிஆருக்கு படம் பிடித்து போனது. மறுநாள் அந்த படத்தை பற்றி தனது நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார் எம்ஜிஆர்.
ஆனால் ஆர் எம் வீரப்பன் படம் சரியாக ஓடவில்லை என கூறி அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். அதாவது அந்த படத்தில் ஹீரோவும் சிவாஜி தான், வில்லனும் சிவாஜி தான். இருவரும் சண்டை போடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என கூற எம்ஜிஆருக்கு அப்பொழுது தான் தன் யோசனைக்கு எட்டியது.ஏனெனில் தான் எடுக்கும் நாடோடி மன்னன் படத்திலும் இரு எம்ஜிஆர் சண்டை போடுவது போன்ற காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தது. ஆகவே இதை கருத்தில் கொண்டு காட்சியை மாற்றி எம்ஜிஆர் நம்பியாருடன் சண்டை போடுவது போல் மாற்றிவிட்டார். மேலும் இந்த நாடோடி மன்னன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் வசூலிலும் விமர்சனத்திலும் பெரும் வெற்றி பெற்றது.