Connect with us
mgr

Cinema History

விஜயகாந்தின் வளர்ச்சியை அன்றே கணித்த எம்.ஜி.ஆர்!.. அந்த சம்பவம்தான் காரணம்!..

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல்ஹாசன் என இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் புதுமுக நடிகராக நுழைந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி பின் ஹீரோவாக மாறியவர் இவர். மெல்ல மெல்ல வளர்ந்து ரஜினி, கமல் ஆகியோருக்கே போட்டியாக வந்தார். சில சமயங்களில் அவர்களின் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூல் செய்த சம்பவமும் நடந்தது.

vijay1
vijayakanth

எம்.ஜி.ஆர் ஒருமுறை காரில் இயக்குனர் டி.ஆர். ராமன்னாவுடன் சென்று கொண்டிருந்த போது வழியில் சிலர் விஜயகாந்தின் புதிய பட ரீலீஸுக்கு போஸ்டர்கள் மற்றும் ஸ்டார்களை ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது காரை நிறுத்தி அவர்களிடம் எம்.ஜி.ஆர் பேசியுள்ளார். அதற்கு நாளை எங்கள் தலைவரின் படம் வெளியாகிறது அதற்காகத்தான் இன்று இரவு முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம் என சொல்ல. எம்.ஜி.ஆர் அவர்களிடம் ‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?’ என கேட்டாராம்.

அதற்கு அவர்கள் ‘இல்லை சார்.. இன்னும் நிறைய வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டுதான் சாப்பிடுவோம்’ என சொல்ல. எம்.ஜி.அர் அவர்களின் கையில் 300 ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டு ‘முதலில் போய் சாப்பிடுங்கள்.. அதன்பின் உங்கள் தலைவருக்கான வேலையை செய்யுங்கள்’ என சொல்லிவுட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

mgr
mgr

காரில் போகும்போது ‘எனக்கு இருந்தது போலவே விஜயகாந்துக்கும் நிறைய ரசிகர்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள் போல. இவர் நல்லா வருவார்’ என இயக்குனர் ராமன்னாவிடம் சொன்னாராம்.

எம்.ஜி.ஆர் கூறியது போலவே அதிக ரசிகர்களை பெற்று பின்னாளில் அரசியலிலும் விஜயகாந்த் களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top