கலைஞருடன் நட்பு போய்விட்டது!. இனிமே யாருக்கும் தரமாட்டேன்!.. எம்.ஜி.ஆருக்கு இருந்த பேனா செண்டிமெண்ட்..

by சிவா |   ( Updated:2023-06-19 12:51:05  )
mgr
X

பெரிய ஆளுமைகளுக்கு எப்போதும் சில செண்டிமெண்ட் இருக்கும். துண்டு, பேனா, புத்தகம், செருப்பு, சந்திக்கும் நேரம், வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் என சின்ன சின்ன விசயங்களில் கூட அந்த செண்டிமெண்ட் இருக்கும். இது பலருக்கும் உண்டு.

திரையுலகை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதியர் கலைஞர் கருணாநிதிதான். அதன்பின் தொடர்ந்துஎம்.ஜி.ஆரின் படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். இருவரும் திமுகவில் இருந்தனர். இருவருமே அண்ணாவை தங்களின் அரசியல் குருவாக நினைத்தவர்கள். அதேநேரம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர் துவங்கிது தனிக்கதை.

mgr

1985ம் வருடம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம். சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்தார். அப்போது சில கோப்புகளில் அவர் கையெழுத்திட வேண்டியிருந்தது. அதற்காக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறைக்கு சென்று கையெழுத்திட்ட எம்.ஜி.ஆர் தனது பேனாவை மறந்து அங்கேயே வைத்துவிட்டார். எம்.ஜி.ஆரின் பேனாவை பார்த்த பாண்டியன் அதை அவரிடம் திருப்பி கொடுக்க விருப்பமில்லாமல் எம்.ஜி.ஆரின் நினைவாக தானாகவே வைத்துக்கொள்வது என முடிவெடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

3 நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆரிடம் ‘உங்கள் பேனாவை நான் எடுத்து கொண்டேன். நீங்கள் தேட வேண்டாம்’ என சொல்லி தனது சட்டை பாக்கெட்டை காட்ட, எம்.ஜி.ஆர் அந்த பேனாவை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்துவிட்டு, அவரை கழிவறைக்கு கூட்டி சென்று அந்த பேனாவை கழிவறையில் போட்டு தண்ணீரை திறந்துவிட்டார்.

mgr

என்ன எம்.ஜி.ஆர் இப்படி செய்துவிட்டாரே என அதிர்ச்சியில் பார்த்த பி.எச். பாண்டியனிடம் ‘நானும் கலைஞர் கருணாநிதியும் நல்ல நட்போடு இருந்தோம். எங்களின் நட்பு முறிவதற்கு சில நாட்களுக்கு முன் அவருக்கு ஒரு பேனாவை பரிசளித்தேன். அதன்பின் நாங்கள் பிரிந்துவிட்டோம். எனவே, நண்பர்களுக்கு பேனாவை பரிசளிக்க கூடாது நான் முடிவெடுத்துள்ளேன்’ என சொன்னாராம்.

Next Story