Cinema History
படம் ஓடாது என்று அன்றே கணித்த எம்ஜிஆர்… நம்பியாரைக் கண்டு கொதித்து எழுந்த ரசிகர்கள்..!
கூண்டுக்கிளி படத்தில் எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா. இவர் அந்தக் காலத்துக் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பி. படத்தை எடுக்கும் முன்பு இது சரிப்பட்டு வருமான்னு எம்ஜிஆர் சந்தேகத்தில் இயக்குனரிடம் கேட்டு இருக்கிறார். எம்ஜிஆரைப் பொருத்த வரை தொழில்ரீதியாக சினிமாவைப் பார்ப்பவர்.
ஜனங்க ஏத்துக்குவாங்களான்னு அலசி ஆராய்வார். ஆனால் டி.ஆர்.ராமண்ணா சிவாஜியின் நடிப்பை மட்டுமே பார்த்தார். இல்லண்ணே இது கரெக்டா வரும். பெரிய அளவில் போகும்னு சொல்லவே சரி. உன் இஷ்டம் படியே செய் என்று எம்ஜிஆர் சொல்லி விடுகிறார். கடைசியில் எம்ஜிஆர் யூகித்தது போலவே இருவேறு ரசிகர்கள் மத்தியில் அடிதடி, கலாட்டாவுடன் படம் அரங்கேறியது.
சிவாஜி எம்ஜிஆரோட மனைவியை ஒரு தலையா காதலிச்சிருப்பார். இது ஒரு கட்டத்தில் எல்லை மீற எம்ஜிஆரும் அந்த வேளையில் ஜெயிலுக்குப் போக, திரும்பி வந்து பார்க்கும் போது இருவருக்கும் சண்டை வரும். இதை ரசிகர்கள் ஏத்துக்கல. இதைத்தான் அன்றே எம்ஜிஆர் சொன்னார்.
1965ல் நாகிரெட்டி தயாரிப்பில் சாணக்யா இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் எங்கவீட்டுப் பிள்ளை.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார். எம்ஜிஆரை நம்பியார் சாட்டையால் அடி அடி என்று அடித்து முதுகு, கை கால், முகம் எல்லாம் வீங்கிப் போய்விடும். அதுகண்டு ரசிகர்கள் கொதித்து எழுந்து இன்டர்வெல்லில் நாகிரெட்டியிடம் போன் போட்டு எங்க தலைவரை இனிமே அடிச்சா உங்க படமே இருக்காது. நாங்க கொளுத்திருவோம்னாங்களாம்.
அப்புறம் இனிமே பாருங்க. உங்க தலைவரு அவரை அடிப்பாருன்னு சொன்னாராம். அதே போல எம்ஜிஆர் நம்பியாரை சாட்டையால் அடித்து விளாசுவாராம். ஒருமுறை நம்பியார் கோடம்பாக்கம் ரெயில்வே கிராசிங்கில் காரில் வந்து நிற்கிறார். அவருதான் டிரைவிங்ல இருக்காரு. நாலு பேரு வந்தாங்க.
எங்க அண்ணனை எப்படி அடிக்கலாம்னு கதவைத் தட்டிக் கேட்குறாங்க. உங்க அண்ணனை யாருன்னே தெரியாது என்றார் நம்பியார்.. வாத்தியாருன்னதும் காசு கொடுத்தாங்க கதைப்படி அடிச்சேன்னாரு. காசு கொடுத்தா அடிப்பியான்னு கேட்டாங்க. அவரு அடிச்சாருல்லன்னும் சொன்னாரு நம்பியாரு. அவரு அடிக்கலாம். நீ அடிக்கக்கூடாதுன்னு சொன்னாங்களாம். இதுக்கு மேல நாம பேசுனா நம்மளை சேர்ந்து அடிச்சிடுவாங்க போலன்னு மன்னிப்பு கேட்டுட்டுப் போயிட்டாராம்.
சரோஜாதேவி ஜோடி. தங்கவேலு, நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம். நான் ஆணையிட்டால், நான் மாந்தோப்பில், கண்களும் காவடி, பெண் போனாள், மலருக்குத் தென்றல், குமரிப் பெண்ணின் உள்ளத்திலே ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.