வாடகை வீட்டில் இருந்த எம்ஜிஆர்!.. வீட்டின் உரிமையாளர் நடந்து கொண்ட செயலால் ஆடிப்போன மக்கள் திலகம்!..
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் சக்தியாக மாறியவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என பல பேர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவர் இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறார் என்றால் அது சாதாரணமாக அவருக்கு கிடைக்கவில்லை.
அதுக்கு பின் ஏகப்பட்ட கடின உழைப்புகள், கஷ்டங்கள் நிறைந்ததாகவே எம்ஜிஆரின் வாழ்க்கை கடந்து போயிருக்கின்றன. ஒரு அரசியல் தலைவராக ஒரு நடிகராக மக்கள் மனதில் பேரும் புகழோடும் இருந்த ஒரே நடிகர் எம்ஜிஆர் தான். மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவராகவே எப்பொழுதும் காணப்பட்டார்.
குடும்பத்தில் நிலவிய வறுமையினால் எம்ஜிஆரும் அவரது அண்ணனான எம்ஜி சக்கரபாணியும் நாடகத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். நாடகங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு சென்றனர்.
இவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ஒரு சகாப்தமாகவே தமிழ் சினிமாவில் விளங்கினா எம்ஜிஆர். இந்த நிலையில் இவரும் டி.ஆர். ராஜகுமாரியும் சேர்ந்து நடித்த முதல் படம் பணக்காரி. அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எம்ஜிஆரும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனராம். அவர்களுக்கு எதிரே ஒரு வீட்டில் ஜானகியையும் குடி வைத்தனராம்.
இதையும் படிங்க : என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் தமிழ் படிக்கவே தெரியாதா?… என்னப்பா சொல்றீங்க!
அப்போது அந்த வீட்டின் உரிமையாளராக இருந்தவர் வக்கீலான ராம் என்பவர். மாதம் 250 ரூபாய் வாடகை கொடுத்து வீட்டில் வசித்து வந்த எம்ஜிஆரிடம் உரிமையாளர் வந்து நீங்கள் மாதம் 250 வீதம் வருடத்திற்கு தோராயமாக 3000 ரூபாய் செலுத்தி வருகிறீர்கள். இப்படியே இன்னும் கொஞ்ச நாள் போனால் வீட்டின் மதிப்புள்ள தொகையையும் கொடுத்து விடுவீர்கள் என்பதால் இந்த வீட்டை உங்களுக்கே தருவதாக நினைக்கிறேன்.
ஆனால் நீங்கள் வருடத்திற்கு 3000 க்கு பதிலாக 9000 ரூபாய் கொடுத்தால் 4 மாதத்தில் இந்த வீட்டின் மொத்த தொகையையும் கொடுத்து விட்டால் உங்களுக்கே இந்த வீட்டை தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த 250 ரூபாயையே ஏற்பாடு செய்யமுடியாமல் தவித்த எம்ஜிஆர் எப்படி 9000 ரூபாய் வருடத்திற்கு கொடுக்க முடியும் என நினைத்து வழக்கம் போல தவனையாக கொடுத்து வந்திருக்கிறார்.
அதன் பின் இப்படியே கொடுத்து வந்ததால் 36000 ரூபாய் தொகையையும் கொடுத்து விட்டதால் அந்த வீட்டையும் எம்ஜிஆர் வாங்கி விட்டாராம். இதை பற்றி எம்ஜிஆர் அவர் கட்டுரையில் இந்த வீட்டை நாங்கள் வாங்குவதற்கு பட்ட கஷ்டத்தை விட எங்களால் முடியும் என்று எங்களை ஊக்கப்படுத்திய அந்த உரிமையாளர் தான் உயர்ந்து நிற்கிறார் என்று பெருமையாக கூறியிருந்தாராம். இதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.