அத்தனை பேருக்கு சாப்பாடு போட்ட கை..! அவர சாப்பிட விடல...! பிரபல நடிகையால் அவமானமடைந்த எம்.ஜி.ஆர்...
சினிமா துறையில் தனது மக்கள் செல்வாக்கால் அனைவரையும் அன்பால் கட்டிப் போட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவரது திரைப்பயணம் மிகவும் அடிமட்டதிலிருந்து ஆரம்பமானது தான். பொருளாதார நெருக்கடியில் சிக்கி நாடக்குழுவில் சேர்ந்து சின்ன சின்ன ரோலில் நடித்து இன்று உலகமே போற்றும் அளவிற்கு வளர்ந்து நின்றார் என்றால் அவருடைய எண்ணமும் பழக்கவழக்கமும் தான்.
கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளோடு சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர் தனது இல்லற வாழ்க்கையிலும் சில சவால்களை சந்திக்க நேர்ந்தது. எல்லா பிரச்சினைகளையும் சுலபமாக கையாளுவதில் வல்லவர் எம்.ஜி.ஆர்.ஒரு சமயம் இவரது நண்பரும் துணை இயக்குனருமான மோகன் காந்திராம் என்பவர் எம்.ஜி.ஆரை பற்றி ஒரு தகவலை கூறினார்.
இதையும் படிங்கள் : இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல..!படப்பிடிப்பை நிறுத்திய வாரிசு படக்குழு…!
அரசிளங்குமரி படத்தின் படப்பிடிப்பு சமயம் அது. அப்போது எம்,ஜி.ஆரை பார்க்க மோகன் சென்றிருக்கிறார். அவர் ஒப்பனைகளுடன் வெகு நேரமாக காத்துக் கொண்டிருக்க சார் இதோ வந்துட்டாங்க , கிளம்பிட்டாங்க மேடம் என்றெல்லாம் கூற எம்.ஜி.ஆரோ பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தான் மோகனுக்கு புரிந்தது. படத்தின் நாயகி பத்மினிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று.
அதுவும் பத்மினி அந்த சமயம் ஹிந்தியிலும் செம டாப். அதனால் மும்பையிலிருந்து கிளம்பியிருக்கிறார் என்று சொல்ல எம்.ஜி.ஆர் காத்து கொண்டிருக்கிறார். படக்குழு சார் இன்னும் அரைமணி நேரம் ஆகும் நீங்கள் வேண்டுமென்றால் சாப்பிட்டு வந்து விடுங்கள் என்று கூறினார்களாம். ஆனால் எம்.ஜி.ஆர் இல்லை ஹீரோயின் வரட்டுமே என்று சொன்னாராம். அவங்க வர தாமதம் ஆகும் என கூற சாப்பிட செல்கிறார் எம்.ஜி.ஆர். சாப்பாட்டில் கையை வைத்ததும் சார் அம்மா வந்துட்டாங்க என்று ஒரு சத்தம், எம்.ஜி.ஆர் உடனே கைகழுவி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாராம்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மோகன் சக்கரவர்த்தியாக பார்த்த நம்ம எம்.ஜி,ஆரா இது? என வாயடைத்து நின்றாராம். இதன் காரணம் என்னவெனில் இந்த படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தான் தயாரித்திருக்கிறது. ஏற்கெனவே இந்த பட நிறுவனம் எம்.ஜி.ஆரின் மீது இவர் சரியாக படப்பிடிப்பிற்கு வரமாட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இருந்ததாம். அதனால் தான் இந்த தடவை நம்மால் இந்த படப்பிடிப்பு நின்று விட கூடாது என எண்ணியே இத்தனை அவமானங்களையும் தாங்கி கொண்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் எம்.ஜி.ஆர் மோகனிடம்.