அட இத்தன நாளா தெரியாம போச்சே!.. எம்ஜிஆர் கோபப்படும் போதெல்லாம் கேட்கும் ஒரே பாடல்..
தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற தலைவராக நடிகராக வலம் வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், என அனைவராலும் அன்பால் அழைக்கப்படும் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் குடும்ப சூழ்நிலை வருத்தி எடுத்தது.
அதன் காரணமாகவே சென்னைக்கு வந்து நாடகம் , சினிமா என தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் சதிலீலாவதி படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஒரு சப்போர்ட்டிங்க் கேரக்டர் தான். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றார்.
கலைவாணர் என்.எஸ்.கேயின் தீவிர பக்தர் எம்ஜிஆர். என்.எஸ்.கே வழியை பின்பற்றி வந்த எம்ஜிஆர் கொடை வள்ளலாகவே வாழ்ந்து வந்தார். இப்படி நாள்தோறும் எம்ஜிஆரை பற்றி பல செய்திகளை நாம் காது குளிர கேட்டு வருகிறோம். இந்த நிலையில் எம்ஜிஆர் கோபப்படும் போது கேட்கக் கூடிய ஒரு பாடலை பற்றி செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.
கே.சங்கர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான படம் தான் ‘ஆண்டவன் கட்டளை’. இந்தப் படத்திற்கு எம்.எஸ்.வி இசை மற்றும் வாலி வரிகள் கூடுதல் சிறப்பம்சம். அப்போதைய் கால கட்டத்தில் சிவாஜி , எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் கே.சங்கர்.
ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் பிரபலமான பாடலான ‘ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’ என்ற பாடலுக்காக முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து படமாக்கப்பட வேண்டும் என கே,சங்கர் கூறியிருந்தாராம். அதற்கு சிவாஜி மிகவும் சலித்துக் கொண்டாராம். இருந்தாலும் இயக்குனர் சொன்ன படி அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட நினைத்துப் பார்க்க முடியாத அளவு மிக அற்புதமாக வந்திருந்தது.
ஒரு சமயம் எம்ஜிஆர் கூட கே.சங்கரிடம் இந்தப் பாடலை பற்றி பேசினாராம். அந்தப் பாடல் அற்புதமாக இருக்கிறது என்றும் நான் கோபப்படும் போது அந்த பாடலை தான் கேட்கிறேன் என்றும் மிகவும் தெய்வ அம்சம் மிகுந்து அந்த பாடல் இருக்கிறது என்றும் வியந்து கூறினாராம்.
இதையும் படிங்க : இத சரிபண்ணிட்டா விஜயகாந்தை பழைய நிலைக்கு கொண்டு வந்துடலாம்!.. இயக்குனர் கூறிய புது டிரிக்..