Cinema History
பாட்டியிடம் இருந்து பாடத்தைக் கற்ற எம்ஜிஆர்… கொடை வள்ளலாக இதுதான் காரணமா…?!
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்று அழைக்கப்படும் எம்ஜிஆர் தானத்தில் கொடை வள்ளலாகவே இருந்தார் என்றால் மிகையில்லை. ஆனால் அதற்கெல்லாம் அச்சாரம் போட்ட சம்பவம் ஒன்று உண்டு. பார்க்கலாமா…
எம்ஜிஆர் தனது இளம்பருவத்தில் வறுமையின் கோரப்பிடியில் தான் வாழ்ந்து வந்தார். அப்போது பெரும்பாலான நாள்கள் ஒருவேளை உணவு தான் கிடைக்குமாம்.
அது சென்னை யானை கவுனி பகுதியில் எம்ஜிஆர் தங்கிய காலம். அப்போது காலையில் எழுந்ததும் வாக்கிங் செல்வாராம். உடன் நண்பர்களையும் அழைத்துச் செல்வாராம். அப்போது அவர்கள் செல்லும் வழியில் ஒரு பாட்டி புட்டு செய்து விற்பாராம். அந்தப் பாட்டியிடம் தினமும் புட்டு வாங்கி எம்ஜிஆர் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவாராம்.
இதையும் படிங்க… 2023ல் டாப் 10 தமிழ்ப்படங்கள் – ரஜினியை ஓரங்கட்டிய சரத்குமார்
அப்படி ஒரு தடவை எம்ஜிஆர் அந்த வழியில் வாக்கிங் சென்ற போது பாட்டியைப் பார்த்ததும் தயங்கியபடி நின்றாராம். என்னப்பா வேணும் என்று பாட்டி கேட்க, நண்பர்களுடன் வந்த எம்ஜிஆர் ஒண்ணுமில்ல பாட்டி.. இன்னைக்கு எனக்கு புட்டு வேணாம்னு சொன்னாராம். ஏன்னு கேட்க, நண்பர்களுக்கும் சேர்த்து வாங்கும் அளவு கையில் காசு இல்லை. அதனால புட்டு வேண்டாம் என்று எம்ஜிஆர் சொன்னதும் அவரது முகத்தையே உற்றுப் பார்த்தாராம் பாட்டி.
பின்னர், பரவாயில்லப்பா… இப்ப புட்டு தாரேன். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நாளைக்கு வரும்போது காசைக் கொடுங்க என்றாராம். உடனே பார்சலை எம்ஜிஆர் கையில் கொடுத்தார் பாட்டி. உடனே அதைக் கையில் வாங்காமல் எம்ஜிஆர், பாட்டி நாங்க நாளைக்கு உங்களுக்கு காசு தராம ஏமாத்திட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்டாராம்.
இதையும் படிங்க… விஜயகாந்தை அழிக்க திட்டமிட்ட ஒரே நடிகர்! கேப்டனின் செல்வாக்கு தெரியாமல் சரண்டர் ஆனதுதான் மிச்சம்
பாட்டி கொஞ்சம் கூட பதறாமல், காசு வந்தா எனக்கு வருமானம். இல்லன்னா அது தருமக் கணக்குல சேரப்போகுது என சொன்னாராம். இது எம்ஜிஆரின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. பிற்காலத்தில் எம்ஜிஆர் பெரிய கொடை வள்ளலாக மாற இதுதான் காரணம் என்றே தோன்றுகிறது. அதே நேரம் கொடுத்த வாக்கைத் தவறாமல் மறுநாளே பாட்டியிடம் புட்டுக்கான காசைக் கொடுத்துவிட்டாராம்.