Connect with us
mgr sivaji

Cinema News

எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…

சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின்னாளில் சினிமாவில் நடிக்க துவங்கியவர்கள்தான் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். சிவாஜியை விட எம்.ஜி.ஆர் 10 வயது மூத்தவர் என்பதால் சிவாஜி அவரை அண்ணன் என அன்போடு அழைப்பார். எம்.ஜி.ஆரும் சிவாஜியை ‘தம்பி கணேசா’ என பாசமாக அழைப்பார்.

சிறு வயது முதலே எம்.ஜி.ஆர் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர் சிவாஜி. சிவாஜிக்கு திருமணம் நடந்தபோது முதல் ஆளாக சென்று எல்லா வேலைகளையும் செய்தவர் எம்.ஜி.ஆர். தன்னை தேடி ஆக்‌ஷன் படம் வந்தால் ‘இது அண்ணன் நடித்தால் சரியாக வரும். அவரிடம் போய் சொல்லுங்கள் என அனுப்பி வைப்பார் சிவாஜி. அந்த அளவுக்கு அவருக்கு எம்.ஜி.ஆர் மீது அன்பும், மரியாதையும் இருந்தது.

இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

ஆனால், திரைத்துறையில் இருவரும் போட்டியாளர்களாகத்தான் பார்க்கப்பட்டார்கள். ஆனால்,எம்.ஜி.ஆர் ஒரு பாணியையும், சிவாஜி ஒரு பாணியையும் கடைபிடித்து சினிமாவில் நடித்தார்கள். அதேநேரம், துவக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய சில கதைகளில் சிவாஜி நடித்த கதையும் நடந்துள்ளது. உத்தம புத்திரன் கதையில் முதலில் எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்தார். அந்த கதையில் சிவாஜி நடிப்பது தெரிந்ததும் அவர் ஒதுக்கி கொண்டார். இப்படி பல சம்பவங்கள் உண்டு.

அப்போது தஞ்சை ராமையாதாஸ் என்பவர் திரைப்படங்களில் பாடல்களை எழுதி கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து ‘ராணி லலிதாங்கி’ என்கிற படத்தை தயாரித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஒரு பாடல் காட்சிக்காக நெற்றியில் விபூதி பேசி எம்.ஜி.ஆரை நடிக்க சொன்னார். ஆனால், தான் சார்ந்திருக்கும் திமுக கொள்கைக்கு அது எதிராக பார்க்கப்படும் என்பதால் அப்படி நடிக்க முடியாது என மறுத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..

கோபமடைந்த ராமையாதாஸ் அதுவரை எடுத்த பிலிம்களை தீயிட்டு கொளுத்தினார். மேலும், அப்படத்திலிருந்து எம்.ஜி.ஆரை தூக்கிவிட்டு சிவாஜியை வைத்து படமெடுத்தார். 1957ம் வருடம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதனால், வாங்கிய கடன்களை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார் ராமையதாஸ்.

rani

அதன்பின் எம்.ஜி.ஆரிடம் சென்று உங்கள் படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டார். நடந்தவற்றை மனதில் நினைக்காத எம்.ஜி.ஆர் தான் நடித்த சக்கரவர்த்தி திருமகள், புதுமை பித்தன், மகாதேவி ஆகிய திரைப்படங்களில் ராமையதாஸுக்கு பாட்டெழுத எம்.ஜி.ஆர் வாய்ப்பு கொடுத்தார்.

இதையும் படிங்க: சொந்த மகன்களுக்கே கிடைக்காத ஒரு கௌரவத்தை ரஜினிக்கு கொடுத்த சிவாஜி! பதறி போய் திகைத்த சூப்பர் ஸ்டார்

google news
Continue Reading

More in Cinema News

To Top