கரண்ட் பில் கூட கட்ட முடியாமல் இருட்டில் வாழ்ந்த சந்திரபாபு!.. எம்.ஜி.ஆர் செய்த பேருதவி!..

by சிவா |   ( Updated:2023-04-27 01:46:58  )
chandrababu
X

chandrababu

திரையுலகில் கருப்பு வெள்ளை காலம் முதலே காமெடி நடிகராக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சந்திரபாபு. ஒல்லியான தேகம், பொத்பொத்தென கீழே இவர் விழுந்தால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நன்றாக நடனம் ஆட தெரிந்தவர். திறமையான பாடகர் என ரசிகர்களை கவர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பலருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் மாறினார்.

சந்திரபாபுவிடம் எவ்வளவு திறமை இருந்ததோ அதே அளவுக்கு அவரிடம் தலைக்கணமும் இருந்தது. சக நடிகர்களிடம் எப்போதும் கெத்தாகத்தான் பேசுவார். ஒருமுறை நீங்கள் யாரை சிறந்த நடிகர் என நினைக்கிறீர்கள்? என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு ‘நானும் சிவாஜி கணேசனும் மட்டும்தான்’ சொன்னார். இது எம்.ஜி.ஆருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுபோல பல சம்பவங்கள் எம்.ஜி.ஆரை கோபப்படுத்தியதுண்டு. எம்.ஜி.ஆரை பற்றி தரக்குறைவாக கூட சில சமயங்களில் சந்திரபாபு பேசியதாக கூறப்படுகிறது.

சந்திரபாபு தயாரிப்பாளராக மாற நினைத்த போதுதான் அவர் தனது பணம் மற்றும் சொத்துக்களை இழந்தார். அதுவும் முதல் படமே எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்க விரும்பி ‘மாடி வீட்டு ஏழை’ என்கிற படத்தை துவங்கினார். ஆனால், சந்திரபாபுவின் நடவடிக்கை பிடிக்கமால் எம்.ஜிஆர். சரியாக படப்பிடிப்புக்கு செல்லவில்லை. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து அப்படியே நின்றது. இதனால், சந்திரபாபுவுக்கு சில லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இன்றைய மதிப்பில் அது சில கோடிகளுக்கு சமம்.

கடன் வாங்கி படம் எடுத்த சந்திரபாபு கடனில் சிக்கி தனது சொத்துக்களை இழந்தார். இதனால் குடிப்பழக்கத்திற்கும் ஆளானார். பட வாய்ப்புகளும் வரவில்லை. கரண்ட் பில் கூட கட்டாமல் அவரின் வீடு இருட்டில் மூழ்கியது. அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்தது. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த அவரின் குடும்பம் பண்டியகையன்று இருண்ட வீட்டில் சோகமாக அமர்ந்திருந்தது. அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது.

Chandrababu
Chandrababu

காரிலிருந்து இறங்கிவந்த ஓட்டுனர் சந்திரபாபுவின் கையில் 5 ஆயிரம் பணம் மற்றும் ஒரு பெரிய பிளம் கேக்கை கொடுத்துவிட்டு ‘இதை எம்.ஜி.ஆர் உங்களிடம் கொடுக்க சொன்னார்’ என சொன்னாராம். சந்திரபாபு சந்தோசத்தில் கதறி அழுதுள்ளார். ஏனெனில் அப்போது 5 ஆயிரம் என்பது இப்போதைய 5 லட்சத்திற்கு சமம். அப்போது அவரின் வீட்டு தொலைப்பேசி ஒலித்தது. அதில், சந்திரபாபுவிடம் பேசிய எம்.ஜி.ஆர் ஒரு புதிய படத்தில் உனக்கு ஒரு நல்ல வேஷம் சொல்லியிருக்கிறேன். நாளை சென்று அவரை பார்’ என சொல்லியிருக்கிறார். அதன்பின் சந்திரபாபு அந்த படத்தில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை நடிகை குட்டி பத்மினி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story