காஷ்மீரில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நாகேஷ்.. எம்.ஜி.ஆர் செய்த பேருதவி...
எம்.ஜி.ஆருக்கு பொன்மன செம்மல் என்கிற பட்டத்தை விட வள்ளல் என்கிற பெயர்தான் அதிகம் பொருந்திப்போனது. அவரை பலரும் அப்படித்தான் அழைத்தனர். அந்த அளவுக்கு பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எம்.ஜி.ஆர் செய்துள்ளார். அதனால்தான் அவரை வாரி வழங்கும் வள்ளல் என எல்லோரும் அப்படி அழைத்தனர்.
அன்பே வா படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றிருந்தது படக்குழு. எம்.ஜி.ஆர் மற்றும் அப்படத்தின் பணி புரிபவர்களுக்கு பெரிய ஹோட்டல்களில் அறையும், நல்ல சிறப்பான விருந்துகளும் கொடுக்கப்பட்டது. அப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தாலும் அந்த செலவுகளை எம்.ஜி.ஆரே ஏற்றுக்கொண்டார்.
அதே காஷ்மீருக்கு வேறு ஒரு படப்பிடிப்பிற்காக நாகேஷ் சென்றிருந்தார். அதிகமான குளிர் மற்றும் பணி காரணமாக படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. படப்பிடிப்பே நடக்காமல் தயாரிப்பாளருக்கு செலவு அதிகரித்துக்கொண்டே போனது. எனவே, பெரிய ஹோட்டலில் சொகுசு அறையில் இருந்த நாகேஷ் ஒரு சிறிய ஹோட்டலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு நல்ல உணவும் கிடைக்கவில்லை. நாகேஷுக்கு அப்படி எனில் படப்பிடிப்பை சேர்ந்த மற்றவர்கள் நிலைமை இன்னும் மோசமாக இருந்துள்ளது.
இதைக்கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அந்த ஹோட்டலில் நாகேஷ் தங்கியிருக்கும் அறைக்கே சென்று ‘இங்கு நிலைமை சரியில்லை என கேள்விப்பட்டேன். படப்பிடிப்பு துவங்கும்வரை இந்த பணத்தை செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ எனக்கூறி முப்பது ஆயிரத்தை கொடுத்தாராம். இதைப்பார்த்து நாகேஷ் நெகிழ்ந்து போனாராம். படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொன்னதாம்.
அன்பே வா படத்தில் நாகேஷ் காமெடியில் கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சண்டை போடுறதுல சீனை மறந்துட்டாரு போல தலைவர்?.. கடுப்பில் நடிகை செய்த காரியம்