ஜெயலலிதாவின் மேக்கப்மேனை வேற நடிகைக்கு மாத்திவிட்ட எம்ஜிஆர்!.. அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம்?..
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் கை ஓங்கி இருக்கும் கால கட்டத்தில் 80களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை இயக்கி நடித்தவர் நடிகையும் இயக்குனருமான ஜெயதேவி. இவர் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஒரு எழுத்தாளராகவும் வலம் வந்தார்.
இதய மலர், வாழ நினைத்தால் வாழலாம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜெயதேவி. இயல்பாகவே பரதநாட்டிய கலைஞரும் கூட. மேலும் நலம் நலமறிய ஆவல்’, ‘பாசம் ஒரு வேஷம்’, ‘விலங்கு’, ‘விலாங்கு மீன்’ போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க : நான் வாழ்கையில செஞ்ச மிகப்பெரிய தப்பு அதுதான்!.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே ரகுவரன்!..
இவர் நடிகையாக இயக்குனராக வந்ததே ஒரு விபத்தே என்றே கூறலாம்.அடிப்படையில் எம்ஜிஆர் மீது அலாதி பிரியம் கொண்ட ஜெயதேவிக்கு எம்ஜிஆர் படத்தில் ஒரு பரத நாட்டியம் சீன் இருக்கு என்று அழைத்துக் கொண்டு போய் குரூப் டான்ஸில் ஆட வைத்திருக்கின்றனர். மேலும் அந்த நேரத்தில் சினிமாவை பற்றிய புரிதலே இல்லாமல் இருந்த ஜெயதேவி எந்த ஒரு பயமும் இல்லாமல் எம்ஜிஆர் பக்கத்தில் போய் அமர்ந்து விடுவாராம்.
ஆனால் எம்ஜிஆர் அவரை கண்டு கொள்ளமாட்டாராம். பரத நாட்டியம் மட்டுமே தெரிந்த ஜெயதேவிக்கு வெஸ்டர்ஸ் டான்ஸ் ஆட தெரியாததால் அவரை பின் வரிசையில் நின்று ஆடச் சொல்லியிருக்கின்றனர். இதய வீணை என்ற படத்தில் காஷ்மீர் ப்யூட்டி ஃபுல் காஷ்மீர் பாடலில் குரூப் டான்ஸுக்காக காஷ்மீர் வரை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் ஜெயதேவி. ஆனால் டான்ஸ் வராத காரணத்தால் பின் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்.
அதன் பின் ஒரு நாள் எம்ஜிஆர் ஜெயதேவியை ஊருக்கு அனுப்பச் சொல்லி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் சமயத்தில் ஜெயதேவி யாரால் இங்கு அழைத்து வரப்பட்டோமோ அவரிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதை எம்ஜிஆர் கேட்டு விட்டாராம்.
அதன் பின் தான் எம்ஜிஆருக்கு தெரிந்ததாம் இவர் பரத நாட்டியக் கலைஞர் என்று. நடந்த சில தினங்களில் உதயம் புரடக்ஷனில் இருந்து ஜெயதேவிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் எம்ஜிஆரே ஜெயதேவிக்கு வேண்டிய உடை, அலங்காரப்பொருள்கள் என்று சகலத்தையும் அனுப்பி வைத்ததாக அந்த புரடக்ஷனில் இருந்து வந்த நபர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு உண்டான எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க சொல்லச் சொல்லியும் அரங்கேற்றம் பண்ண வேண்டும் என்றும் எம்ஜிஆர் சொன்னதாக அந்த நபர் சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் ஜெயலலிதாவிற்கு யார் மேக்கப் போடுவார்களோ அவர்களையே ஜெயதேவிக்கும் போடச் சொன்னாராம். ஜெயலலிதாவிற்கு காலையில் கால்ஷீட் என்றால் ஜெயதேவிக்கு அதற்கேற்றவாறு நேரத்தில் மேக்கப் போட்டு வீட்டு போவாராம். இப்படி முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் ஜெயதேவியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த வள்ளலாக எம்ஜிஆரி இருந்திருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை ஜெயதேவியே ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : முத்தக்காட்சிக்கு பயந்து கமல்ஹாசனுடன் நடிக்க மறுத்த நடிகைகள்… யார் யார்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!!