Cinema History
தனது டூப்பு நடிகருக்கும் அள்ளி கொடுத்த எம்.ஜி.ஆர்!.. அட இவ்வளவு செஞ்சிருக்காரா!..
சினிமாவில் ஹீரோ இரட்டை வேடங்களில் நடிக்கும்போது ஒரு வேடத்தில் மற்றொரு நடிகர் நடிப்பார். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், சில காட்சிகள் ஹீரோவுக்கு பதில் வேறொரு நடிகர் நடிப்பார். அதாவது இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹீரோ வசனம் பேசும்போது எதிரேவும் அதே ஹீரோ நிற்பது போல காட்சி வரும். அதற்கு வெறொரு நடிகரை பயன்படுத்தி அவரின் முதுகு மற்றும் தலையை மட்டும் காட்டுவார்கள். பார்ப்பதற்கு அது ஹீரோ போலவே தெரியும். அதை சினிமாவில் டூப்பு என அழைப்பார்கள்.
எம்.ஜி.ஆரும் பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர் நடித்து 1958ம் வருடம் வெளியான திரைப்படம் நாடோடி மன்னன். இதில், இரட்டை வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு டூப் நடிகராக நடித்தவர் கே.பி.ராதாகிருஷ்ணன். எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, நீரும் நெருப்பும், நினைத்ததை முடிப்பவன், மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருக்கு டூப் நடிகராக நடித்தார்.
இவரின் மூத்தமகளின் திருமணம் 1976ம் வருடம் நடந்தது. திருமண செலவுக்கு பணமில்லாமல் தவித்த ராதாகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்து உதவி கேட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர் திருமண ‘செலவு எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நீ யாரிடம் கடன் வாங்க கூடாது’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். கூறியது போலவே மண்டப வாடகை முதல் அனைத்து செலவுகளையும் அவரே செய்தார். ராதாகிருஷ்ணனை ஒரு ரூபாய் கூட செலவு செய்ய எம்.ஜி.ஆர் அனுமதிக்கவில்லை. இதைப்பார்த்து ராதாகிருஷ்ணன் திக்குமுக்காடி போனார். அதோடு விடாமல், திருமணம் முடிந்ததும் மணமக்ககளை வீட்டிற்கு அழைத்து விருந்தும் கொடுத்து, சிறப்பு பரிசுகளையும் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை என்பதற்கு இந்த சம்பவமே பெரிய உதாரணம்.