போராடி காதலியை கரம் பிடித்த இசையமைப்பாளர்!..வாழ்க்கையை வசந்தமாக்கிய எம்.ஜி.ஆர்!..
தமிழ் சினிமாவில் இசைப்பயணத்தில் பிரம்மாக்களாக வலம் வந்த இரட்டையர்களான விஸ்வநாதன் - இராமமூர்த்தி இவர்களை பின்பற்றி வந்தவர்கள் சங்கர் கணேஷ் எனும் மற்றுமொரு இசை இரட்டையர் ஜாம்பவான்கள். இவர்கள் இசையில் வெளிவந்த முதல் படம் மகராசி. அதை தொடர்ந்து ஏராளமான ஹிட் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
இதில், கணேஷ் விஸ்வநாதனிடம் உதவியாளராக தான் இருந்தார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கணேஷுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நல்ல பழக்கம் இருந்ததாம். எம்.ஜி.ஆர் படங்களில் அமைந்த பாடல்களுக்கு இவர் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க : இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம்… அன்னக்கிளி படம்தானே?… அதுதான் இல்ல…
அந்த காலங்களில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர்களில் ஒருவரின் பெண்ணை கணேஷ் காதலித்து வந்துள்ளார். எப்படியாவது காதலித்த பெண்ணை கரம் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் கணேஷ் இருந்துள்ளார். அவர் காதலியும் அதே நிலையில் தான் இருந்தாராம். ஆனால், அந்த தயாரிப்பாளருக்கு அவர்களின் காதல் பிடிக்கவில்லையாம். எனவே, அவர்களின் திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லையாம்.
ஆனால், ஒரு நாள் கணேஷுக்கு தொலைபேசி அழைப்பு வர எதிரே பேசியவர் அந்த தயாரிப்பாளர். என் பொண்ணை பார்க்க நாளைக்கு உன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு வா என சொல்லிவிட்டு உடனே தொலைபேசியை துண்டித்து விட்டாராம்.
அதன் பிறகு தான் தெரிந்தது அவர் காதலுக்கு தயாரிப்பாளரை பச்சைக்கொடி காட்ட வைத்தது எம்.ஜி.ஆர் என்று. எம்.ஜி.ஆர் கணேஷை பற்றி அந்த தயாரிப்பாளரிடம் நல்ல பையன், ஒழுக்கமானவன் என்று சொன்னதின் பேரில் அந்த தயாரிப்பாளர் தன் பெண்ணை கொடுக்க சம்மதித்திருக்கிறார்.
இந்த தகவலை இசையமைப்பாளர் கணேஷ் ஒரு யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.