நாகேஷ் கட்டிய தியேட்டருக்கு அங்கீகாரம் கொடுக்காத அரசாங்கம்!..சமயோஜிதமாக யோசித்து திறக்க வைத்த எம்ஜிஆர்!..
தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ். ஆனால் அவரின் வாழ்க்கையிலும் பல துக்கமான சம்பவங்களும் சங்கடங்களும் அரங்கேறியிருக்கிறது. அதில் பெரும்பாலும் தலையிட்டு தீர்த்த வைத்தவர் நம்ம புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். அப்படி ஒரு சம்பவம் தான் இதோ:
இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஒரு திரையரங்கம் கட்டினால் பின்னாளில் அது நமக்கு வருமானம் தரக்கூடியதாக அமையும் என சர்ச்பார்க்கில் கட்டி முடித்துவிட அதை பரிசீலித்த அரசாங்க அதிகாரிகள் திரையரங்கம் திறக்க அனுமதி அளிக்க வில்லையாம். ஏனெனில் திரையரங்கத்திற்கு முன் ஒரு கான்வெண்ட் பள்ளி அமைந்திருக்கிறது.
பள்ளிக்கு முன் திரையரங்கம் இருந்தால் அது மாணவர்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும் என கருதி அதிகாரிகள் மறுத்துவிட என்ன செய்வதென்று தெரியாமல் எம்ஜிஆரை அணுகியிருக்கிறார். இருக்கிற பணத்தை எல்லாம் போட்டும் கடனும் வாங்கியும் கட்டிய திரையரங்கம். மூடினால் என் நிலைமை மோசமாகி விடும் என எம்ஜிஆரிடம் கெஞ்சியிருக்கிறார் நாகேஷ்.ஆனால் எம்ஜிஆர் நாகேஷை சரமாரியாக திட்டியிருக்கிறார்.
கொஞ்ச நேர யோசனைக்கு பின் ‘சரி, நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நாகேஷை அனுப்பி வைத்தாராம் எம்ஜிஆர்.மறு நாள் நாகேஷுக்கு ஷூட்டிங். அங்கு போய் தனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினைகளெல்லாம் மறந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். சிறிது நேரத்திற்கு பிறகு நாகேஷுக்கு அரசாங்கத்திடமிருந்து போன் வர இவர் நேராக எம்ஜிஆரை போய் பார்த்திருக்கிறார். பிரச்சினையெல்லாம் முடிந்து விட்டது என எம்ஜிஆர் கூற மகிழ்ச்சியில் திளைத்த நாகேஷ் என்ன நடந்தது என கேட்டிருக்கிறார்.
ஒன்றுமில்லை. அந்த பள்ளிக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அதனால் பள்ளிக்கு மாணவர்கள் எப்போதும் வரும் பாதையை மூட சொல்லிவிட்டேன். வேறு பாதையில் போக சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் நீ திரையரங்கம் கட்டி இன்னொரு நல்லதும் பண்ணியிருக்கிறாய் என்று கூற நாகேஷ் என்ன என கேட்டார். அந்த பாதை எப்போதும் டிராஃபிக் ஜாமாக இருக்குமாம். அதனால் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய சங்கடமாக இருந்திருக்கின்றது. உன் பிரச்சினையால் தான் இந்த பிரச்சினை என் கண்முன் வந்தது. அதனால் இப்பொழுது அதுவும் சரியாகி விட்டது என கூறினாராம் எம்ஜிஆர். இப்படி எல்லார் வாழ்விலும் விளக்கேற்றியவராக இருந்திருக்கிறார் மக்கள் திலகம். இந்த அழகான பதிவை இயக்குனர் மனோபாலா கூறினார்.