ரசிகர்களால் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாடகத்தில் நடிக்க துவங்கி பின் சினிமாவில் நுழைந்தவர். யார் மனதையும் காயப்படுத்தாமல் காமெடி செய்யும் திறமை உடையவர். எம்.ஜி.ஆருக்கு குரு போல எல்லாவற்றையும் சொல்லி தந்தவர். எம்.ஜி.ஆருக்கு தகுந்த நேரத்தில் நல்ல அறிவுரைகளை கூறி அவரை வழிநடத்தியவர். அதனால்தான் என்.எஸ்.கே மீது எம்.ஜி.ஆர் மிகுந்த அன்பும், மரியாதையும் கடைசிவரை வைத்திருந்தார்.
பல திரைப்படங்களில் மக்களுக்கு தேவையான அறிவுரையை காமெடி மூலம் சொல்லி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அதோடு, சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை பிறக்கு கொடுத்துவிடும் குணம் கொண்டவர். கஷ்டம் என வந்து இவரின் யார் உதவி கேட்டாலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அப்படியே கொடுத்துவிடும் வள்ளலாக இருந்தார். இவரிடமிருந்துதான் பிறக்கு உதவும் குணத்தையே எம்.ஜி.ஆர் கற்றுக்கொண்டார் எனவும் கூறப்படுவதுண்டு.
அப்படி இருந்ததால்தான் என்.எஸ்.கே. தனது மகனுக்காக கூட எதையும் சேர்த்துவைக்கவில்லை. என்.எஸ்.கேவின் மரணத்திற்கு பின் அவரின் மகன் எம்.ஜி.ஆரை சந்தித்து ‘நான் பொறியியல் படிப்பு படிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், கல்லூரியில் சேர போதுமான பணம் இல்லை. நீங்கள்தான் உதவ வேண்டும்’ என உதவி கேட்டாராம். அதற்கு எம்.ஜி.ஆர் ‘எவ்வளவு வேண்டும்?’ எனக்கேட்க, அவரோ மூவாயிரம் தேவைப்படும் என்றாராம். எம்.ஜி.ஆர் அந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு ‘கல்லூரிக்கு செல்வதற்கு முன் என்னை வந்து பார்’ என கூறி அவரை அனுப்பிவிட்டாரம்.
அதேபோல், கல்லூரிக்கு செல்லும் முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்க்க அவர் சென்றுள்ளார். ‘கல்லூரியில் சேர்ந்தாச்சா?’ என விசாரித்துவிட்டு ‘உன் அப்பா ஒன்றரை கோடி வருமான வரி கட்டியவர். அப்படியெனில் அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார்?’ என எம்.ஜி.ஆர் கேட்க, என்.எஸ்.கே மகன் ‘எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது’ என்றாராம். அதற்கு எம்.ஜி.ஆர் ‘உன் அப்பா பல கோடிகளை சம்பாதித்தார். ஆனால், இப்போது எதுவும் இல்லை. பணம் நிரந்தரம் இல்லாதது. ஆனால், படிப்பு நிலையானது. அதனால்தான் உனக்கு உதவி செய்தேன்’ என அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கிறார்.
என்.எஸ்.கே மகனும் நன்றாக படித்து பொறியாளராகி கை நிறைய சம்பாதித்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…