இனி எல்லாமே நீங்கதான்!..கதறி அழுத சாவித்திரிக்கு நம்ம மக்கள் திலகம் செஞ்ச காரியம் என்னனு தெரியுமா?..

பழம்பெரும் நடிகை சாவித்திரி அந்த காலத்தில் அனைத்து முன்னனி நடிகர்களோடும் சேர்ந்து நடித்து பெரும் புகழ் பெற்று விளங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்து தன் அசாத்தியமான நடிப்பால் நடிகையர் திலகம் என்ற பட்டத்தையும் பெற்றார்.
சிவாஜிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பெண் நடிகைகளில் சாவித்திரிக்கு இணை சாவித்திரி தான். இருவரும் சேர்ந்து நடித்த பாசமலர் படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பர். இருவருக்குமே நடிப்பின் மேல் அலாதி பிரியம் உண்டு. இந்த அளவுக்கு பேரும் புகழும் நிறைந்த சாவித்திரியின் சொந்த வாழ்க்கை அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லை.
இதை அவரின் வரலாற்று படமான மகாநதி படத்தின் மூலமே நாம் அறிந்திருப்போம். அது போக சில விஷயங்களை நினைத்தால் அது நம் மனதை உலுக்குபவையாக இருக்கிறது. ஒரு சமயம் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த சாவித்திரி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனைக்கு தனக்கு நெருங்கிய நண்பரை பார்க்க எம்.ஜி.ஆரும் அங்கு வந்திருக்கிறார்.
அப்போது சாவித்திரி அனுமதிக்கப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர் அவரை போய் பார்த்திருக்கிறார். மருத்துவமனைக்கு கூட காசு இல்லாமல் இருந்த சாவித்திரியின் நிலைமை அறிந்து எம்.ஜி.ஆர் மனம் மிகவும் வேதனையடைந்திருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு உண்டான சாவித்திரியின் செலவை எம்.ஜி.ஆரே கட்டியிருக்கிறார். அதன் பிறகு சாவித்திரி இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் எம்.ஜி.ஆரை போய் சந்தித்திருக்கிறார். அவரை பார்த்து மன்றாடி அழுதிருக்கிறார். இருப்பதற்கு கூட வீடு இல்லை. நீங்கள் தான் இனி எனக்கு எதாவது பண்ண வேண்டும் அண்ணா என கெஞ்சியிருக்கிறார்.
உடனே எம்.ஜி.ஆர் அப்போது திருப்பூர் மணிமாறனை அழைத்து அண்ணா நகரில் சாவித்திரிக்கு என்று சொந்தமாக ஒரு வீடு தர சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அது போக மாடிக்கு சென்று ஒரு பையை எடுத்து சாவித்திரி கையில் கொடுத்து இந்த பாரும்மா இதுல ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு உன் உடம்பை பார்த்துக் கொள் என்று பத்திரமாக அனுப்பி வைத்தாராம்
எம்.ஜி.ஆர்.