More
Categories: Cinema History Cinema News latest news

உதவி கேட்ட துணை நடிகர்!.. இறந்தபிறகும் காசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. எப்படி தெரியுமா?..

எம்.ஜி.ஆரிடம் யாரவது சென்று உதவி கேட்டால் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கேட்கும் உதவியை செய்து கொடுப்பது அவரின் வழக்கம். நம்மிடம் பணம் இருக்கிற்து அது இல்லாதவர்களுகும் உதவ வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாக இருந்தது. இதனால் சாதாரண மக்கள் முதல் திரையுலகை சேர்ந்தவர்கள் வரை பலரும் உதவிக்காக அவரின் வீட்டின் கதவை தட்டியதுதான் வரலாறு. யாருக்கும் இல்லை என சொல்லாமால் அள்ளி கொடுத்தார் எம்.ஜி.ஆர். இதனால், அவரின் வீட்டின் முன்பே எப்போதும் பெருங்கூட்டம் காத்திருக்கும்.

Advertising
Advertising

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாமிக்கண்ணு. 80களில் பல படங்களில் பஞ்சாயத்து காட்சிகளில் நடித்திருப்பார். சிவாஜி நடித்து வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி’ என வசனம் பேசுவார். இவர் ஒரு நாடக நடிகர். சிவாஜி நடிப்பில் வெளிவந்த பராசக்தி படம் நாடகமாக உருவானபோது அதில் ஹீரோவாக நடித்தவர் இவர்தான். இதை சிவாஜியே சொல்லியிருக்கிறார்.

சரி விஷயத்திற்கு வருவோம். இவருக்கு பெரிதாக வருமானம் கிடையாது. இவரின் மகளுக்கு திருமணம் முடிவானது. ஆனால், திருமண செலவுக்கு பணமில்ல்லை. எங்கே போவது என அவர் யோசித்து நினைக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ராமபுரம் தோட்டத்துக்கு சென்று அவரை சந்திக்க முயன்றார் சாமிக்கண்ணு. ஆனால், அங்கு மக்களும், தொண்டர்களும் கூடியிருந்ததால் ஒருவாரமாக அலைந்தும் எம்.ஜி.ஆரை அவரால் சந்திக்கமுடியவில்லை.

எட்டாவது நாள் இவர் சென்றபோது எம்.ஜி.ஆர் காரில் வந்தார். சாமிக்கண்ணு கூட்டத்தின் ஓரத்தில் நின்றவாறு எம்.ஜி.ஆரை பார்த்து கும்பிட்டார். காரை நிறுத்தச்சொன்ன எம்.ஜி.ஆர் அவரை அழைத்து விபரம் கேட்டார். திருமண தேதியையும், மண்டபத்தையும் குறித்துக்கொண்டார். சரி எம்.ஜி.ஆர் நமக்கு உதவுவார் என நினைத்து மகிழ்ச்சியுடன் சென்றார் சாமிக்கண்ணு. ஆனால், ஒருவாரத்தில் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார்.

இது சாமிக்கண்ணுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ‘மனுஷன் நமக்கு உதவ நினைத்தார். ஆனால்,சாமிக்கு கண்ணில்லை’ என புலம்பினார். ஆனால், திருமணம் நடந்த அன்று மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கிய ஒருவர் ’எம்.ஜி.ஆர் உங்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தனது டைரியில் எழுதி வைத்துள்ளார்’ என சொல்லி அந்த பணத்தை அவரின் கையில் கொடுக்க சாமிக்கண்ணு கண்களில் ஆனந்த கண்ணீர்.

மறைந்தும் எம்.ஜி.ஆர் நமக்கு உதவியிருக்கிறார் என சாமிக்கண்ணு நெகிழ்ந்து போனார்.

Published by
சிவா

Recent Posts