பாராட்டுக்காக சிவாஜியை இப்படியா பயன்படுத்துவது?.. நடிகர் பாண்டு வரைந்த ஓவியத்தால் கடுப்பாகிப் போன எம்ஜிஆர்!..
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இருவரும் காலத்திற்கும் நிலைத்து நிற்கிறார்கள் என்றால் அவர்கள் செய்த சாதனைகள் தான் இந்த அளவுக்கு பேசவைக்கிறது. தமிழ் சினிமாவின் அடையாளங்களாக திகழ்ந்தவர்கள் சிவாஜியும் எம்ஜிஆரும்.
இருவரின் படங்களும் அவரவர் ரசிகர்களுக்குத் தேவையான அம்சங்களைப் பெற்று நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் சினிமாவை தாண்டி இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். சினிமாவிற்குள் இருந்த போட்டி ஒரு ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : பண நெருக்கடியில் இருந்த எம்ஜிஆர்.. உதவிய மூதாட்டி!.. அவரை அழைத்துக் கொண்டு எங்கு சென்றார் தெரியுமா?..
சினிமா நடிகர் பாண்டு ஓவியம் வரைவதில் வல்லவர். ஏராளமான படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர். ஒரு சமயம் சின்ன சின்ன 100 சிவாஜி படங்களை கொண்டு ஒரு எம்ஜிஆர் படத்தை வரைந்து 100 சிவாஜி = 1 எம்ஜிஆர் என்ற தலைப்பில் ஒரு பத்திரிக்கையில் பதிவிட்டிருக்கிறார்.
இதை பார்த்து எம்ஜிஆர் பாண்டுவை வரவழைத்திருக்கிறார். இதன் மூலம் நம்மை பாராட்டத்தான் எம்ஜிஆர் வரசொல்லியிருக்கிறார் என்று பாண்டுவும் மிகவும் சந்தோஷமாக போனாராம். ஆனால் எம்ஜிஆரோ பாண்டுவை கடுமையாக திட்டியிருக்கிறார். எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் அந்த நேரத்தில் தொழிலில் கடுமையாக போட்டி இருந்த நேரம். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பாண்டு இப்படி பண்ணியதை எம்ஜிஆரால் தாங்க முடியவில்லை. அதனால் அவரை திட்டி அனுப்பிவிட்டார்.
இதனால் சோகமடைந்த பாண்டு எம்ஜிஆருடன் நடித்த நடிகைகளின் புகைப்படங்களை கொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்தை வரைந்து அதை எம்ஜிஆருக்கு பரிசளிக்க அதை பார்த்து எம்ஜிஆர் பாராட்டினாராம். கூடவே தம் திறமையும் புகழும் ஒருவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர யாரையும் தாழ்த்தவோ புண்படுத்தவோ கூடாது என்ற விதத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.