தொடர்ந்து 100 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்!.. தியேட்டரில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்….

Published on: October 6, 2023
mgr
---Advertisement---

Actor MGR: 1950,60களில் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன். பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் நுழைந்தாலும் சுமார் 10 வருடங்களுக்கு பின்னரே அவர் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதுவரை கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

தனக்கென ஒரு காலம் வரும் என நம்பி காத்திருந்தார். 10 வருடங்களுக்கு பின் ராஜகுமாரி என்கிற படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் நாடோடி மன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். துவக்கத்தில் பல சரித்திர கதைகளில் ஹீரோவாக நடித்தார்.

இதையும் படிங்க: 10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்…

வேகமாக கையை சுழற்றி எம்ஜி.ஆர் போடும் வாள் சண்டையில் அவருக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். எம்.ஜி.ஆர் ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். ஆனாலும், நடிப்புக்கு தீனி போடும் சோக மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார்.

ஆனால், அவரின் இமேஜ் மாறியதால் தனக்காக ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி நடித்தார். பஞ்சு – கிருஷ்ணன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து 1972ம் வருடம் வெளியான திரைப்படம் இதய வீணை. இப்படத்தில் மஞ்சுளா, சிவக்குமார், லட்சுமி, நம்பியார் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் சில காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: 18 நாட்களில் முடிக்கப்பட்ட படம்… எம்.ஜி.ஆர் ராசியால் 100 நாட்கள் ஓடிய அதிசயம்.. என்ன படம் தெரியுமா?

அப்போது அந்த சூழலுக்கு ஏற்றபடி எம்.ஜி.ஆர் உடுத்தியிருந்த உடையும், கூலிங் கிளாஸும் அவர மேலும் அழகுப்படுத்தி காட்டியது. இந்த படம் வெளியாகி சென்னையில் மட்டுமன்றி மற்ற ஊர்களிலும் வசூலை குவித்தது. குறிப்பாக மதுரை தேவி திரையரங்கில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

மேலும், திருச்சி பேலஸ் தியேட்டர் மற்றும் கோவையில் இரண்டு திரையரங்கிலில் பல நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.