எம்.ஜி.ஆரை பாதித்த அந்த திருமண பத்திரிக்கை!..விலாசம் ஏதும் குறிப்பிடாமல் தவிக்க வைத்த அந்த நபர் யார் தெரியுமா?..
ஏவி.எம் ஸ்டூடியோவில் சினிமா பிரபலங்களுக்கென ஏராளமான திருமணங்கள் நடந்து இருக்கின்றன. ஆனால் 1973 ஆம் ஆண்டில் ஏவி.எம்.மெய்யப்பச்செட்டியாரின் மூத்த மகனான பாலசுப்பிரமணியனின் திருமணம் கோலாகலமாக இதுவரை நடந்த திருமணங்களில் இவரின் திருமணம் தான் மிகப்பிரம்மாண்டமாக நடந்தேறியது. கூடவே 21 ஜோடிகளுக்கு இலவச திருமணமும் நடத்தி வைக்கப்பட்டன.
இந்த திருமணத்திற்கு தலைமை தாங்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அந்த 21 ஜோடிகளுக்கு பட்டு சேலை, பட்டு வேட்டி, கூடவே தங்கத்தில் செயின் உட்பட பரிசுகளை வழங்கினார். திருமணம் நடந்த அதே மாதத்தில் அவருக்கு ஒரு திருமண பத்திரிக்கை வந்திருக்கின்றது. ஏராளமான கடிதங்கள் எம்.ஜி.ஆரை தேடி வர அதில் ஒன்றாக இந்த திருமண பத்திரிக்கையும் வந்து சேர்ந்திருக்கின்றது.
இதையும் படிங்க : முதல் படத்திலேயே ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்த பாரதிராஜா… ஆனால் நடந்த சம்பவமோ வேறு!!
அதில் எம்.ஜி.ஆரை அழைக்கும் விதமாக எந்த ஒரு குறிப்பும் இல்லை, பண உதவி கேட்டும் ஒரு தகவலும் இல்லை, யார்? எதற்காக? என்றும் எந்த ஒரு கருத்தும் குறிப்பிடப்படவில்லை. இதை பார்த்த எம்.ஜி.ஆருக்கு ஒரே குழப்பமாக இருந்திருக்கிறது. தன்னுடைய ரகசிய உதவியாளரை அழைத்து இந்த பத்திரிக்கையை பற்றி விசாரிக்க வர சொல்லியிருக்கிறார். விசாரித்ததில் வடபழனி ராம் தியேட்டர் அருகே இருக்கும் ஒரு செருப்பு தொழிலாளியின் மகள் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பத்திரிக்கை என தெரிய வந்திருக்கிறது.
ஏழையோ பணக்காரனோ தன் வீட்டில் நடக்கும் திருமண பத்திரிக்கையை முதலில் குலதெய்வத்திற்கு தான் வைப்பார்கள்.அதே நோக்கத்தில் தான் இந்த தொழிலாளியும் எம்.ஜி.ஆரை குலதெய்வமாக நினைத்து பத்திரிக்கையை அனுப்பியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர் இவ்வளவு ஏழையாக இருந்தும் தன்னிடம் காசு பணத்தை எதிர்ப்பார்க்காமல் இப்படி செய்ததை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த திருமணத்திற்கு ஏராளமான பரிசு பொருட்களுடன் எம்.ஜி.ஆர் சென்றாராம். அவரை பார்த்த திருமண வீட்டார்கள் ஆரவாரம் செய்திருக்கின்றனர். இந்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.