ரஜினியை எம்.ஜி.ஆர் கடத்தியது உண்மையா?? பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், லதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆயிரம் ஜென்மங்கள்”. இத்திரைப்படத்தை துரை இயக்கியிருந்தார். முத்துராமன் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ரஜினியும், நடிகை லதாவும் ரகசியமாக திருமணம் செய்துகொள்ளப்போவதாக எம்.ஜி.ஆருக்கு ஒரு தகவல் வந்ததாம். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான முத்துக்குமாருக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்ட எம்.ஜி.ஆர், “எங்கே இருக்கீங்க?” என கேட்க, அதற்கு முத்துக்குமார் “ஐயா, ஆஃபீஸ்லதான்யா இருக்கேன்” என கூறியிருக்கிறார்.
அப்போது எம்.ஜி.ஆர் “நான் அடுத்த முறை ஃபோன் பண்ற வரைக்கும் ஆஃபீஸை விட்டு எங்கையுமே போகக்கூடாது. நீங்கள் யாருக்கும் ஃபோன் செய்யவும் கூடாது. வேறு யாரிடமும் பேசவே கூடாது” என்று கட்டளையிட்டு கட் செய்து விட்டாராம்.
எம்.ஜி.ஆர் இவ்வாறு கூறியதும் முத்துக்குமாருக்கு மிக பதற்றமாக இருந்ததாம். “எம்.ஜி.ஆர் ஏன் இப்படி கூறினார்?” என அவருக்கு புரியவில்லையாம். எனினும் எம்.ஜி.ஆரே கூறிய பிறகு நம்மால் அதனை மீறமுடியுமா என்று தனது அலுவலகத்திலேயே இருக்க முடிவு செய்துவிட்டாராம் முத்துக்குமார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. “இப்போ நீங்க உங்க வேலைய பார்க்கலாம்” என கூறி ஃபோனை வைத்துவிட்டாராம். உடனே கோவையில் இருக்கும் படக்குழுவிற்கு ஃபோன் செய்து நடந்த விவரத்தை குறித்து கேட்டாராம்.
அதாவது ரஜினிகாந்த்தும் லதாவும் மருதமலை கோவிலில் ரகசியமாக திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக ஒரு தகவல் தனது காதுக்கு வந்தவுடன் உடனே தனது ஆட்களை அனுப்பி ரஜினிகாந்த்தை சென்னைக்கு கூட்டி வந்துவிட்டாராம் எம்.ஜி. ஆர்.
இதையும் படிங்க: சிவாஜியை கண்டபடி திட்டிய தேங்காய் சீனிவாசன்… செம கடுப்பில் வெளியே துரத்திய எம்.ஜி.ஆர்… ஏன் தெரியுமா?
அதே போல் தனது ஆட்களிடம் லதாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்ல கட்டளை பிறப்பித்துவிட்டாராம். எனினும் அதன் பின் எம்.ஜி.ஆரின் ஆட்கள் ரஜினிகாந்த்தையும் லதாவையும் மீண்டும் கோவையில் வந்து இறக்கிவிட்டுவிட்டார்களாம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.