எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுத்த ஒரே பெண் பாடகி... அதுவும் இந்த பாடலுக்காக தெரியுமா?

by Akhilan |
MGR
X

MGR

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக வலம் வந்த காலத்தில் அவரின் பல படங்களுக்கு ஆண் பாடகர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு குரல் ஒரே ஒரு பெண் பாடகி குறித்த சுவாரஸ்ய தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகிறது.

LR Eashwari

LR Eashwari

எப்போதுமே தனது படங்களில் எல்லா துறைக்கும் அதிக மெனகெடலை செய்பவர் தான் எம்.ஜி.ஆர். அதனால் தான் என்னவோ அவரின் படங்களை இன்று பார்த்தால் கூட பிரம்மாக இருக்கும். அதில் பாடல்களை இன்று கேட்டால் கூட அதே எனர்ஜியை நமக்கு கொடுக்கும். எம்.ஜி.ஆருக்கு எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ். ஜெயராமன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ எஸ்.சி.கிருஷ்ணன் போன்றோர் பாடல் பாடி இருக்கிறார்கள்.

MGR

ஆனால் அவரின் மொத்த திரை வாழ்விலும் அவரின் குரலுக்கு ஒரு முழு பாடலையும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தி தானே. ஆங்கிலோ இந்திய பெண்ணாக வேடமிட்டு "காதல் வாகனம்" என்ற படத்தில் ஒரு பாடல் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். "இன்னாமேன் பொண்ணு நான்" என்ற அந்த பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி குரலுக்கு எம்.ஜி.ஆர் பெண்ணாக வில்லன் அசோகனை மயக்குவது போல நடித்திருப்பார்.

Next Story