எம்.ஜி.ஆர் இந்த ஒரு விஷயத்துல கில்லாடி தான்...! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு உண்மை..!

சினிமாவில் பெரும் புரட்சியை செய்தவர் நடிகரும் புரட்சி தலைவருமான நடிகர் எம்.ஜி.ஆர். மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு அப்புறம் சினிமாவில் நுழைந்தவர் நம் புரட்சி தலைவர். சினிமாவை பொறுத்தவரைக்கும் மன்னர், அரசர் என்றாலே நம் கண்முன் நிற்பவர் எம்.ஜி.ஆர் தான்.
அந்த அளவுக்கு மன்னர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவர். நடிக்கும் போதே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டமையால் கட்சிக்குள் நுழைந்தார். திராவிட கட்சியில் இருந்து விலகி தனியாக அண்ணா திராவிட கட்சியை உருவாக்கி வெற்றி கண்டார்.
இதையும் படிங்கள் : மணிரத்னம் செய்யத் தவறிய ஒரு விஷயம்…! எப்படி மறந்தாரு…? கோடம்பாக்கத்தில் வைரலாகும் செய்தி…
இவர் சினிமாவில் இருக்கும் போதே மக்கள் பலம் வாய்க்கப்பெற்றவராக விளங்கியதால் அரசியலில் ஈடுபடுவது இவருக்கு எளிதாகி விட்டது. அந்த மக்கள் பலத்தால் தான் முதலமைச்சர் பதவியை அடைந்தார். சினிமாவில் யாருக்கும் இல்லாத அங்கீகாரம் இவருக்கு கிடைத்தது.
இதுவரை எந்த நடிகரும் பாரத ரத்னா விருதை பெற்றது இல்லை. நடிகரில் பாரத ரத்னா பெற்ற ஒரே நடிகர் நம் எம்.ஜி.ஆர் தான். இவருக்கு முன்னும் சரி பின்னும் சரி யாரும் இந்த விருதை பெறவில்லை. அதுதான் இவருடைய தனிச்சிறப்பு என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.