நூறு நாள் சாதனை படைத்த திரைப்படம்!.. நான்கு முறை பார்த்த எம்ஜிஆர்!.. !.. ஏன் பார்த்தாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..

mgr_main
ஒரு நடிகராக அரசியல் தலைவராக இருந்த எம்ஜிஆர் ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞரும் கூட என எத்தனை பேருக்கு தெரியும். நடிகராக மட்டுமே தன் வேலையை பார்க்காமல் சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளிலும் நுழைந்து தன் அனுபவங்களை பெறுபவர் தான் எம்ஜிஆர்.
அதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் இயக்குனர் வி.சி.குகநாதன் ஒரு பேட்டியின் போது கூறினார். வி.சி.குகநாதன் ஒரு எழுத்தாளராக இயக்குனராக, தயாரிப்பாளராக, வசன கர்த்தாவாக தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவரின் எழுத்துத் திறமையை முதன் முதலில் கண்டறிந்தவர் நடிகர் எம்ஜிஆர் தான்.

mgr1
அதன் காரணமாக ஒரு தெய்வ வழிபாட்டிற்கு இணையாக எம்ஜிஆரை பார்க்க தொடங்கினார் வி.சி.குகநாதன். ஒரு சமயம் ஏவிஎம்மிடம் இருந்து கதை சொல்லுமாறு வி.சி.குகநாதனுக்கு அழைப்பு வர இவரும் போய் கதை சொல்லியிருக்கிறார். அதே போல் இன்னொரு நாளும் கதை சொல்லும் படி அழைப்பு வந்திருக்கிறது.
இதையும் படிங்க : ஜெயலலிதாவின் மேக்கப்மேனை வேற நடிகைக்கு மாத்திவிட்ட எம்ஜிஆர்!.. அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம்?..
அப்போதும் போய் வி.சி.குகநாதன் கதை சொல்லியிருக்கிறார். கதை கேட்டுவிட்டு வி.சி.குகநாதனை ஏவிஎம் நிறுவனத்திலேயே வேலை பார்க்கும் படி அணுக வி.சி.குகநாதனோ மறுத்திருக்கிறார். ஏனெனில் எல்லாம் எம்ஜிஆருக்காகத் தானாம். அங்கேயே வேலை பார்த்தால் எம்ஜிஆருக்காக படம் பண்ண முடியாது என்ற எண்ணத்தினால் மறுத்திருக்கிறார்.

mgr vc guganathan
ஆனால் இதை அறிந்த எம்ஜிஆர் வி.சி.குகநாதனை ஏவிஎம் நிறுவனத்தில் வேலை பார்க்க சொல்லி தான் கூப்பிடும் போது வந்தால் போதும் என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது அலாதி பிரியம் கொண்டவராக வி.சி.குகநாதன் இருந்துள்ளார். அவர் ஒரு பேட்டியில் எம்ஜிஆரை பற்றி கூறும் போது அவர் ஒரு சிறந்த எடிட்டரும் கூட என்பதற்கு உதாரணமாக ஒரு தகவலை கூறினார்.
அதாவது பேர் சொல்ல விரும்பாத ஒரு படத்தை நான்கு முறை பார்த்தாராம் எம்ஜிஆர். முதல் தடவை பார்த்து விட்டு தேவையில்லாத சீன்களை கட் செய்ய சொல்லி மீண்டும் பார்த்தாராம். அப்போதும் சில காட்சிகளை இடம் மாற்றி வைத்து பார்த்தாராம். இப்படி படத்திற்கு ஏற்றவாறு சில ஏற்ற இறக்கங்களை செய்திருக்கிறார் எம்ஜிஆர்.

vc guganathan
அதன் பிறகே ரிலீஸாக அந்தப் படம் நூறு நாள் ஓடி சாதனை படைத்ததாம். எடிட்டிங் அறைக்குள் வந்தாலும் ரீல்களை உற்று நோக்கி பார்த்தவாறே இருப்பாராம் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : சில்க் ஸ்மிதாவுடன் ஒரு இரவு!… கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபல இயக்குனர்… அடக்கொடுமையே…